தேசிய தகவல் மையத்தில் சயின்டிஸ்ட் பணி!...495 பேருக்கு வாய்ப்பு

3/18/2020 5:32:12 PM

தேசிய தகவல் மையத்தில் சயின்டிஸ்ட் பணி!...495 பேருக்கு வாய்ப்பு

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி-வேலை வழிகாட்டி

தேசிய தகவல் மையம் (National Informatics Centre NIC) 1976-ல் நிறுவப்பட்டது. மின்-ஆளுமைப் பயன்பாடுகள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான டிஜிட்டல் வாய்ப்புகளை ஊக்குவிக்கும் விதமாக உருவெடுத்துள்ளது. மத்திய, மாநில மற்றும் மாவட்டங்களிலுள்ள அரசு அமைச்சகங்கள் / துறைகளில் மின்-ஆளுமைப் பணிகளை வழிநடத்துவதில் என்.ஐ.சி முக்கிய பங்குவகிக்கிறது. தேசிய தகவல் மையத்தின் ஒரு பிரிவாக நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எலக்ட்ரானிக்ஸ் & ஐ.டி. நிறுவனம் உள்ளது. மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் & ஐ.டி. அமைச்சகத்தின்கீழ் செயல்படும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எலக்ட்ரானிக்ஸ் & ஐ.டி. நிறுவனத்தில் 495 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடங்கள்: சயின்டிஸ்ட்  ‘பி’ பிரிவில் 288, ‘சயின்டிஸ்ட் / டெக்னிக்கல் -‘ஏ’ பிரிவில் 207 என மொத்தம் 495 காலியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: இரண்டு பிரிவுகளுக்கும் எலக்ட்ரானிக்ஸ், இ.சி.இ., கம்ப்யூட்டர், ஐ.டி., சாஃப்ட்வேர் சிஸ்டம், நெட்வொர்க்கிங், எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகிய பிரிவில் பி.இ., / பி.டெக்., / எம்.சி.ஏ. / எம்.எஸ்சி. முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது 26.3.2020 அன்றின்படி பொதுப் பிரிவினர் 30, ஓ.பி.சி. 33, எஸ்.சி. / எஸ்.டி. 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையம்: விண்ணப்பதாரர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ள நகரங்களிலிருந்து எழுத்துத் தேர்வுக்கான மையத்தைத் தேர்வு செய்துகொள்ளலாம். தேர்வு செய்த மையத்தில் பிற்காலத்தில் எந்த மாற்றமும் அனுமதிக்கப்படாது. பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை மற்றும் நிர்வாக வசதி ஆகியவற்றைப் பொறுத்து விண்ணப்பதாரர்களுக்கு எந்த இடத்திலும் எழுத்துத் தேர்வுக்கு இடம் ஒதுக்குவதற்கான உரிமையை NIELIT கொண்டுள்ளது. அகர்த்தலா, அஹமதாபாத், அய்சாவ்ல், பெங்களூரு, போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, டெஹ்ராடூன், டெல்லி, காங்டோக், காடாவ், இம்பால், ஜம்மு, ஜெய்ப்பூர், கோஹிமா, கொல்கத்தா, லெஹ், லக்னோ, மும்பை, நஹர்லாகுன், பாட்னா, போர்ட் பிளேர், ராய்ப்பூர், ராஞ்சி, திருவனந்தபுரம், ஷில்லாங், விசாகப்பட்டினம்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.calicut.nielit.in/nic/Login.aspx என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பொதுப் பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 800. ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும். பெண்கள் / எஸ்.சி. / எஸ்.டி. / மாற்றுத்திறனாளி பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசிநாள் 26.3.2020.

மேலும் முழுவிவரங்களுக்கு www.calicut.nielit.in/nic/documentformats/DetailedAdvertisement.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்க்கவும்.

தொகுப்பு: முத்து

X