நெட், பிஎச்டி தேர்ச்சி பெற்றவர்கள் மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஆகலாம்

11/9/2015 12:32:01 PM

நெட், பிஎச்டி தேர்ச்சி பெற்றவர்கள் மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஆகலாம்

தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள 10 பேராசிரியர்கள், 18 இணை பேராசிரியர்கள், 27 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்;

அ. பேராசிரியர்:

10 இடங்கள் (பொது - 9, எஸ்சி - 1). இவற்றில் வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், பொருளியல், கல்வியியல், ஆங்கிலம், இந்தி, இதழியல், சமூகவியல், தமிழ், வாழ்க்கை அறிவியல் ஆகிய துறைகளில் தலா ஒரு இடம் காலியாக உள்ளது.

சம்பளம்:

ரூ.37,400 - 67,000 மற்றும் தர ஊதியம் ரூ.10 ஆயிரம்.

ஆ. இணை பேராசிரியர்:

18 இடங்கள் (பொது - 14, எஸ்சி - 3, எஸ்டி - 1). இவற்றில் கம்ப்யூட்டர் சயின்ஸ், பொருளியல், கல்வியியல், வாழ்க்கை அறிவியல், கணிதம், இதழியல், சமூகவியல் ஆகிய துறைகளில் தலா 2 இடங்களும், இந்தி, மெட்டீரியல் சயின்ஸ், இசை மற்றும் கவின் கலை, தமிழ் ஆகிய துறைகளில் தலா ஒரு இடமும் காலியாக உள்ளன.

சம்பளம்:

ரூ.37,400 - 67,000 மற்றும் தர ஊதியம் ரூ.9,000.

இ. உதவி பேராசிரியர்:

27 இடங்கள் (பொது - 15, ஒபிசி - 7, எஸ்சி - 3, எஸ்டி - 2). இவற்றில் கம்ப்யூட்டர் சயின்ஸ், கல்வியியல், இதழியல், சமூகவியல் ஆகிய துறைகளில் தலா 4 இடங்களும், இந்தி, இசை மற்றும் கவின் கலை, தமிழ் ஆகிய துறைகளில் தலா 2 இடங்களும், மெட்டீரியல் சயின்ஸ் துறையில் 3 இடங்களும், இயற்பியல், கணிதம் துறையில் தலா ஒரு இடமும் காலியாக உள்ளன.

உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.எச்டி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வான யுஜிசி/ சிஎஸ்ஐ ஆர்-நெட்/ ஸ்லெட்/ செட் ஆகிய தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஏற்கனவே 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் ஏற்கனவே இதே போன்ற காலியிட அறிவிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. அதற்காக முன் விண்ணப்பித்த விண்ணப்ப எண்ணை குறிப்பிட வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.750. எஸ்சி., எஸ்டி., மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.500. இதை Central University of Tamilnadu என்ற பெயரில் திருவாரூரில் மாற்றத்தக்க வகையில் செலுத்த வேண்டும் அல்லது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் www.cutn.ac.in என்ற இணையதளத்திலிருந்து செலானை பதிவிறக்கம் செய்து கட்டணத்தை செலுத்தலாம்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.cutn.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

CENTRAL UNIVERSITY OF TAMILNADU,
Neelakudi Campus,
Kangalancherry,
THIRUVARUR- 610 101.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.11.2015.

can i take xyzal in the morning read can i take xyzal in the morning

X