பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் கதிரியக்க இயற்பியல் பட்டயப்படிப்பு படிக்க ரெடியா?

8/17/2017 4:55:11 PM

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் கதிரியக்க இயற்பியல் பட்டயப்படிப்பு படிக்க ரெடியா?

உதவித்தொகை ரூ. 9300   இந்திய அரசின் அணு ஆற்றல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (Babha Atomic Research Centre) ஓராண்டு கதிரியக்க இயற்பியல் பட்டயப் படிப்பு (Diploma in Radiological Physics - Dip. R.P) மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இடங்கள் ஓராண்டு அளவிலான கதிரியக்க இயற்பியல் பட்டயப்படிப்புச் (Diploma in Radiological Physics - Dip. R.P)  சேர்க்கைக்குப் பரிந்துரையில்லா இடங்கள் 25, அரசு அமைப்பில் கதிரியக்கச் சிகிச்சைத் துறையில் (Radiotherapy) பணியாற்றுபவர்க்ளுக்கான பரிந்துரை இடங்கள் 5 என்று மொத்தம் 30 காலியிடங்கள் இருக்கின்றன. 

கல்வித்தகுதி இயற்பியல் பாடத்தை முதன்மையாகக் கொண்டு இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு (B.Sc) மற்றும் முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்து இருக்க வேண்டும். இளநிலை மற்றும் முதுநிலைப்பட்டப்படிப்புகளில் 60% மதிப்பெண்கள் தேவை. மேற்கண்ட மதிப்பெண்களுக்கு இணையாக புள்ளிக்கணக்கில் பெற்றிருப்பது அவசியம். பரிந்துரைக்கான இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் கதிரியக்கச் சிகிச்சைத் துறையிலான பணியில் ஒராண்டு அனுபவம் தேவை.

வயது வரம்பு வயது 1-10-2017 அன்று பொதுப்பிரிவினர் -26 ஆண்டுகள், இதர பிற்பட்ட வகுப்பினர் - 29 ஆண்டுகள், எஸ்சி., எஸ்டி வகுப்பினர் - 31 ஆண்டுக்குள் இருக்கவேண்டும். மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு 10 ஆண்டுகள் வரை வயதுத் தளர்வு உண்டு. பரிந்துரைக்கப்படும் இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு  வயதுவரம்பு 40.  விண்ணப்பப் படிவம் https://recruit.barc.gov.in/ அல்லது http://barc.gov.in/ எனும் இணையதளத்திற்குச் சென்று இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

 

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 21-8-2017. பொது நுழைவுத் தேர்வு 3-9-2017 அன்று பொது நுழைவுத்தேர்வு ஒன்று நடத்தப்படும். இந்த நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு இந்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிப்படி, மாணவர் சேர்க்கை நடத்தப் பெறும். மாணவர்களுக்கு 1-10-2017 முதல் வகுப்புகள் தொடங்கி நடைபெறும். இப்பயிற்சிக் காலத்தில் பரிந்துரை இல்லாத மாணவர்கள் அனைவருக்கும் உதவித்தொகை மாதம் ரூ 9300/. கூடுதல் தகவல்களுக்கு,  022-25505050 / 25592000 எனும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

- முத்துக்கமலம் 

மேலும்

X