மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை!

8/17/2017 4:56:58 PM

மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை!

தமிழ்நாட்டில் மருத்துவம் சார்ந்த பல்வேறு பணிகளுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளைக் கொண்டு அரசு மற்றும் சுயநிதிக் கல்லூரிகள் பல செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் பட்டப்படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான 2017-2018 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

இளநிலைப் பட்டப்படிப்புகள்

தமிழ்நாட்டிலுள்ள மருத்துவம் சார்ந்த பணிகளுக்கான படிப்புகளைக் கொண்டிருக்கும் அரசு மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில்;
1.     B.Pharm., - 4 ஆண்டுகள்
2.     B.Sc. (Nursing) - 8 பருவங்களைக் கொண்ட 4 கல்வியாண்டுகள் (4 Academic years of 8 Semesters)
3.     B.P.T - 8 பருவங்களைக் கொண்ட 4 கல்வி யாண்டுகள் மற்றும் 6 மாதக் கட்டாய இருப்பிட உள்ளகப் பயிற்சி (4 Academic Years of 8 Semesters and 6 months Compulsory Resident Internship)
4.     B.ASLP (Bachelor in Audiology and Speech Language Pathology) - ஒரு ஆண்டு உள்ள கப் பயிற்சியுடனான 4 கல்வியாண்டுகள் (Academic Years including one year internship)
5.     B.Sc. (Radiology & Imaging) - 3 ஆண்டுகள் மற்றும் 6 மாதக் கட்டாயத் தொழில்நுட்ப இருப்பிட உள்ளகப் பயிற்சி (3 years and 6 months Compulsory Technology Resident Internship)
6.     B.Sc. (Radio Therapy Technology) - 3 ஆண்டு கள் மற்றும் 6 மாதக் கட்டாய இருப்பிட உள்ளகப் பயிற்சி (3 years and 6 months Compulsory Resident Internship)
7.     B.Sc. (Cardio-Pulmonary Perfusion) - 3 ஆண்டுகள் மற்றும் 6 மாதக் கட்டாயத் தொழில்நுட்ப உள்ளகப் பயிற்சி (3 years and one year Compulsory Technology Internship)
8.     B.O.T - 8 பருவங்களைக் கொண்ட 4 கல்வி யாண்டுகள் மற்றும் 6 மாதக் கட்டாய இருப்பிட உள்ளகப் பயிற்சி (4 Academic years of 8 semesters and 6 months compulsory Resident Internship)
9     B. Optom - 3 ஆண்டுகள் மற்றும் 6 மாத காலக் கட்டாய உள்ளகப் பயிற்சி (3 years and one year Compulsory Internship)
என்று 9 வகையான மருத்துவம் சார்ந்த பணிகளுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகள் உள்ளன.
 
கல்வித்தகுதி

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், கல்வித்தகுதி யாக பிளஸ் டூவில் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும் அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதம் பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும். பிளஸ் டூ தொழிற்கல்விப் பாடங்களை எடுத்துப் படித்தவர்கள் மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்க முடியாது.  

B.Pharm. / B.ASLP படிப்புகளுக்கு பிளஸ்டூவில் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் அல்லது கணிதம் பாடங்களின் 40% தேர்ச்சி அவசியம். எஸ்சி., எஸ்சிஏ., எஸ்டி பிரிவினருக்கு பிளஸ்டூவில் தேர்ச்சி போதும்.

B.Sc. (Nursing) படிப்புக்கு பிளஸ்டூவில் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களில் 45% தேர்ச்சி தேவை. எஸ்சி., எஸ்சிஏ., எஸ்டி பிரிவினருக்கு பிளஸ்டூவில் மேற்காணும் பாடங்களின் மொத்த மதிப்பெண்களாகக் குறைந்தது 40% பெற்றுத் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.

B. Optom படிப்புக்கு பிளஸ்டூவில் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் கணிதப் பாடத்தில் தேர்ச்சி அவசியம். B.Sc. (Radiology & Imaging Technology), B.Sc. (Radio -Therapy Technology), B.Sc. (Cardio Pulmonary Perfusion Technology), B.O.T, B.P.T போன்ற படிப்புகளுக்கு பிளஸ்டூ வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களுடன் தேர்ச்சி போதும்.

வயது
B.Sc. (Nursing) படிப்புக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 31-12-2017 அன்று 17- 30 வயதுக்குள் இருக்கவேண்டும். எஸ்சி., எஸ்சிஏ., எஸ்டி பிரிவினர் 35 வயதுக்குள் இருக்கவேண்டும். பிற படிப்புகளுக்கு 17 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.  

மாணவர் சேர்க்கை இடங்கள்
அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் 100% இடங்களும், சுயநிதிக் கல்லூரி களில், சிறுபான்மையினருக்கான கல்லூரிகளில் 50% இடங்களும், சிறுபான்மையினரல்லாத கல்லூரிகளில் 65% இடங்களும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள். இந்த இடங்களுக்கு ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

விண்ணப்பம்
மேற்காணும் அனைத்துப் படிப்புகளுக்கும் விண்ணப்பிக்க ஒரு விண்ணப்பம் போதும். இந்தப் பொது விண்ணப்பம் மற்றும் தகவல் குறிப்பேட்டினைத் தமிழ்நாட்டிலுள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் பெறலாம். அருகிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வருக்கு வேண்டுதல் கடிதத்துடன் “The Secretary, Selection Committee, Kilpauk, Chennai - 600 010” எனும் பெயரில் சென்னையில் மாற்றிக் கொள்ளக்கூடிய வகையில் ரூ 400/-க்கு டிடி எடுத்து விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் குறிப்பேட்டினைப் பெற்றுக் கொள்ளலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இலவசம்.

விண்ணப்பம் தரவிறக்கம்
மேற்காணும் பொது மற்றும் சிறப்பு விண்ணப்பப்படிவம், விளக்கக் குறிப்பேடு ஆகியவைகளை www.tnhealth.org அல்லது www.tnmedicalselection.org எனும் இணைய முகவரிகளிலிருந்து தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம். கடைசி நாள்: 23-8-2017. விண்ணப்பிப்பவர் குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருந்தால், அவர்கள் உரிய சான்றிதழினைப் பெற்று அனுப்பிட வேண்டும். மேலும் விண்ணப்பதாரரின் குடும்பத்தில் அவரது உடன் பிறந்தோர் இச்சலுகையினைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது என்பது முக்கியம்.

சிறப்புப் பிரிவினர்
இப்படிப்புகளுக்கு 1. முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், 2. முட நீக்கியல் சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவினர். இவர்கள் விண்ணப்பப்படிவத்துடன், சிறப்புப் பிரிவு படிவத்தினையும் இணைத்து “The Secretary, Selection Committee, Kilpauk, Chennai - 600 010” எனும் பெயரில் சென்னையில் மாற்றும்படி ரூ 100/-க்கு டிடி எடுத்து  இணைக்க வேண்டும்.

நிரப்பப்பட்ட விண்ணப்பம்
விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ் நகல்கள் மற்றும் 23 X 10 செ.மீ மற்றும் 36 X 28 செ.மீ அளவு கொண்ட இரு அஞ்சல் உறைகளையும் இணைத்து, அனுப்பும் உறையின் மேல் பகுதியில் ‘APPLICATION FOR PARAMEDICAL COURSES 2017-2018 SESSION’ எனக் குறிப்பிட்டு, “The Secretary, Selection Committee, Directorate of Medical Education, Kilpauk, Chennai-10” எனும் முகவரிக்கு 24-8-2017 மாலை 5.00 மணிக்குள் சென்றடையும்படி அனுப்பித்தர வேண்டும். தரவிறக்கிய விண்ணப்பமெனில் உரிய சான்றிதழ் நகல்களுடன் அதற்குரிய கட்டணத்துக்கான டிடி பெற்று இணைத்து அனுப்பலாம்.

கலந்தாய்வு
விண்ணப்பதாரர்களின் பிளஸ்டூ மதிப்பெண்களில் உயிரியல் (X), இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்கள் (Y), தாவரவியல் மற்றும் விலங்கியல் (Z), கணிதம் (W) எனக் கொண்டு ஒவ்வொன்றும் 100 மதிப்பெண்களுக்குக் (% அளவில்) கணக்கிடப்பட்டு, பின்னர் X + Y அல்லது Z + Y அல்லது W + Y என்று 200 மதிப்பெண்களுக்குக் கணக்கிடப்பட்டு அதற்கான தரப்பட்டியல் 6-9-2017 அன்று மேற்காணும் இரு இணையதளங்களிலும் வெளியிடப்படும். அதன் பின்னர், கூடுதல் மதிப்பெண் பெற்றவர்களை முதன்மையாகக் கொண்டு, ஒற்றைச் சாளர முறைக் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் இக்கலந்தாய்வு நடத்தப்பெறலாம்.

மாணவர் சேர்க்கை
கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் மாணவர்கள், மேற்காணும் அரசு மற்றும் சுயநிதி இந்திய முறைக் கல்லூரிகளில், தாங்கள் விரும்பும் மருத்துவப் படிப்புகளைத் தேர்வு செய்து சேர்க்கை அனுமதி பெறலாம். தமிழ்நாடு அரசு இட ஒதுக்கீட்டு விதிப்படி மாணவர் சேர்க்கை நடைபெறும்.

கல்லூரிக் கட்டணம்
அரசு மருத்துவக் கல்லூரிகளில் B. Optom.  படிப்புக்கு ரூ1,750/- என்றும், பிற படிப்புகளுக்கு ரூ 1,200/- என்றும் ஆண்டுக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் B.Pharm., - ரூ 38,000/- B.Sc. (Nursing) - ரூ 40,000/-, B.P.T. - ரூ 33,000/- B.O.T. - ரூ 33,000/- என்று ஒவ்வொரு படிப்புக்கும் ஆண்டுக்கட்டணம் தனித்தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்படிப்புகள் தவிர, பிற படிப்புகள் சுயநிதிக் கல்லூரிகள் எதிலுமில்லை. இதே போல் B.O.T. படிப்பு அரசுக் கல்லூரிகள் எதிலுமில்லை.  கூடுதல் தகவல்களுக்கு, அரசு மருத்துவக் கல்லூரிகளின் அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது இப்படிப்புகளுக்கான தேர்வுக்குழு அலுவலகத்தின் 044- 28361674 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும்

X