கோள்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் என்ன வேறுபாடு?

9/14/2017 5:18:28 PM

கோள்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் என்ன வேறுபாடு?

வானத்தில் சுழன்று சுற்றிவரும் நட்சத்திரங்களுக்கும், கோள்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் மாணவர்கள் பல சமயங்களில் குழம்பிவிடுகிறார்கள். அதனால்தான் வெள்ளிக்கோளை விடிவௌளி நட்சத்திரம் என்று கூறும் காமெடி நடக்கிறது. நாம் தினமும் வானத்தை உற்றுக் கவனித்தால் நட்சத்திரங்கள் ஒரே இடத்தில் நிலையாக இருப்பதுபோல் தோன்றும். அது மட்டுமல்லாமல், அவை சீரியல் பல்புகள் மாதிரி மின்னி ஒளிரக் கூடியவை. ஆனால் கோள்களும் ஒரே இடத்தில் நிலையாக இருப்பதைப்போல் தோன்றும். அதே சமயம் அவை மின்னி, மின்னி ஒளிராமல் தொடர்ந்து ஒளி உமிழக்கூடியவை.

அண்டவெளியில் பரவியிருக்கும் மெலிதான வளிமண்டலப் படலத்திலிருந்தே நட்சத்திரங்கள் உருவாகின்றன. வெறும் பனியும், காற்றும், தூசுக்களும் நிறைந்த ஒரு வான்பொருள்தான் விண்வெளியெங்கும் இறைந்து கிடக்கும் விண்மீன்கள். நம் பூமியைச் சுற்றிப் போர்வை போல் போர்த்தியிருக்கிற வளிமண்டலம், பேரண்டப்பரப்பிலும் பரவியிருக்கிறது. (வளிமண்டலம் என்றால் பூமியில் இருப்பது போலவே ஆக்சிஜன், கார்பன்-டை-ஆக்சைடு போன்றவை இருக்காது. ஒவ்வொரு கோளிலும் வெவ்வேறு காற்றுகள் நிரம்பியிருக்கும்.)

வளிமண்டலத்தில் பரவியிருக்கக்கூடிய மூலக்கூறுகள் ஈர்ப்பு விசையினால் ஒன்றன்பின் ஒன்றாக இணைகின்றன. இவ்வாறு இணையும் மூலக்கூறுகள் பின்னா்; அடர்த்தியாக மாறிக் காற்றுக்கோளமாக இறுகுகின்றன. காற்றுத் துகள்களுக்கு இடையே நிலவும் ஈர்ப்புவிசை முதலில் குறைந்தும் பின் வேகமாக அதிகரிக்கத் தொடங்குகிறது. காற்றுக்கோளம், உருவானவுடன் காற்றுக் கோளத்தின் மூலக்கூறுகள் அதன் மையத்தை நோக்கிச் செல்கின்றன. எனவே காற்றுக்கோளும் சுருங்க ஆரம்பிக்கின்றன.

காற்றுக்கோளும் சுருங்குவதால், அதன் வெப்பம் பேரளவு அதிகரிக்கிறது. ஒரு கட்டத்தில் காற்றுக்கோளும் அதற்கு மேலும் சுருங்க முடியாமல் நின்று விடுகிறது. இந்த நேரத்தில் காற்றுக்கோளத்தில் நடைபெறும் வேதிவினையால் ஹைட்ரஜன் அணுக்கள் ஹீலியம் அணுக்களாக இணைகின்றன.

இதன் பெயர் அணுக்கரு இணைவினை. இந்த நிலையில் சுருங்கிக்கொண்டிருந்த காற்றுக்கோளம் ஒளி ஆற்றலை உமிழ்கிறது. அணுக்கருவினை வேகமாகும்போது அதிக ஒளியும், வினை மெதுவாகும்போது குறைவான ஒளியும் உமிழப்படுகிறது. இதன் காரணமாகவே நட்சத்திரம் மின்னி மின்னி மறைகிறது.

-ஆதலையூர் சூரியகுமார்