அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..

8/28/2018 3:15:30 PM

அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..

நன்றி குங்கும் கல்வி-வேலை வழிகாட்டி

It’s I vs It’s me?

“சார். Degrees of Comparison test paperல ‘I am faster than my brother.’ என்ற Comparative degreeக்கு My brother is not as fast as I am, என்பதுதான் அதனுடைய Positive degree என்று சொன்னீங்க இல்லையா? எனக்கு அதுல ஒரு சந்தேகம் சார்” என்றபடியே வந்தமர்ந்தாள் அகிலா.

அகிலாவைப் பார்த்தவுடன் காபி கோப்பையுடன் ரவியும் வந்தமர்ந்தான். “அதுல என்னம்மா சந்தேகம்?” என்றபடியே தன் காபி கோப்பையை எடுத்தார் ரகு. “My brother is not as fast as me”ன்னு…. அதாவது as I am என்பதற்கு பதிலாக as me என்று சொல்லக்கூடாதுங்களா சார்?” என்றாள் அகிலா.  

“A valid question Akila. நான் எம்.ஏ. படிக்கும்போது எனக்கு இது ஒரு புரியாத புதிராத்தான் இருந்தது. நீ கேட்ட மாதிரி நானும் சந்தேகம் கேட்டப்போ எங்க லெக்சரர்ஸ் எல்லாம் நாமினேடிவ் கேஸ், அக்யுசிடிவ் கேஸ், அந்த கேஸ், இந்த கேஸ் என்று மிகவும் தெளிவாக என்னைக் குழப்பினார்கள். அவர்களைப் போல் நான் இலக்கண ஜார்கண்களைக் கொண்டு உன்னைக் குழப்பப்போவதில்லை.

இத்தனை வருட அனுபவத்திற்குப் பிறகுதான் எனக்கே ஓரளவுக்கு தெளிவு பிறந்திருக்கு. To be precise, ‘as I am’ என்பது grammatical form and ‘as me’ is spoken form. But when you have to answer in the competitive examinations, ‘as I am’ is the correct answer and ‘as me’ is acceptable in Communicative English.”

‘I run faster than my brother’ என்று சொல்லுவது கூட இலக்கண முறைப்படி சரியல்ல.  ‘I run faster than my brother does’ என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், தற்போது அப்பட்டமாக ரெண் அண் மார்ட் டின் இலக்கணத்தை பயன்படுத்த முடிவதில்லை. தற்கால நியாயமான மாற்றத்திற்கேற்ப மொழிப் பயன்பாடும் வளைந்து நெளிந்துதான் செல்ல வேண்டியிருக்கிறது.

எனவே, ‘It’s me’ என்றாலும் ‘It’s I’ என்றாலும் ஒரே பொருள்தான். ‘It’s I who did all these things’, ‘It’s me who was called first’ என்பதும் சரிதான். நிறைய வாசிக்க வாசிக்க இந்தக் குழப்பங்கள் எல்லாம் தீர்ந்துவிடும். அதனால try to cultivate the habit of reading daily through which, your vocabulary will develop, grammatical application would flow subconsciously and you can elevate yourself to higher esteem. Time up. See you later” என்றவாறே கணினியில் கண் பதித்து தன் அலுவலகப் பணியைத் தொடர்ந்தார் ரகு.

- சேலம் ப.சுந்தர்ராஜ்

X