அனிதாவின் நினைவாக aNEETa ஆப்!

12/5/2018 3:08:43 PM

 அனிதாவின் நினைவாக aNEETa ஆப்!

நன்றி குங்குமம் சிமிழ் - கல்வி வழிகாட்டி

மத்திய அரசு மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கியது. +2-ல் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் மருத்துவப் படிப்பில் சேர சீட் கிடைக்காமல் மனமுடைந்த அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அரியலூர் மாணவி அனிதா நினைவாக புதிய செயலி ஒன்றை டெல்லியைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஜெகதீசன் என்பவரது மகள் இனியாள் உருவாக்கி உள்ளார். இனியாள் 12ம் வகுப்பு படித்து வருகிறார். அனிதா நினைவாக உருவாக்கியதால் aNEETa என இந்த செயலிக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த செயலியில் நீட் தேர்வின் மாதிரி வினாத்தாள்களும் அது தொடர்பான தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

‘நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவ நினைத்து aNEETa செயலியை உருவாக்கியுள்ளேன், நீட் தேர்வை எதிர்கொள்ள தேவையான தகவல்கள் இந்த செயலியில் இடம்பெற்றுள்ளன’ என மாணவி இனியாள் தெரிவித்துள்ளார்.

X