நிலவில் பருத்தி விவசாயம்

2/12/2019 4:00:18 PM

நிலவில் பருத்தி விவசாயம்


நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

நிலவில் தரையிறங்கியுள்ள சீனாவின் சாங்’இ4 ரோபோட்டிக் ஆய்வு விண்கலத்தில் பருத்தி, உருளைக்கிழங்கு விதைகள், ஈஸ்ட் மற்றும் பழ ஈக்களின் முட்டைகள் ஆகியவை கொண்ட மண்ணும் எடுத்துச் செல்லப்பட்டது. இருளாக இருக்கும் நிலவின் மறுபக்கத்தில் ஆய்வை மேற்கொண்டுவருகிறது சாங்’இ4. இது நிலவின் மறுபக்கத்தில் தரையிறங்கியபின் மேற்கொள்ளப்பட்டிருக்கும் முதலாவது ஆராய்ச்சி முயற்சியாகும்.

அவ்வாராய்ச்சியில்  சாங்’இ4 விண்கலம் மூலம் நிலவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பருத்தி விதைகள் முளைத்துள்ளன என்று சீனாவின் தேசிய விண்வெளி முகமை தெரிவித்துள்ளது. ‘‘நிலவில் மனிதகுலத்தின் முதலாவது உயிரினப் பரிசோதனை நிறைவுபெறுகிறது’’ என சீன அரசு குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் முன்பு தாவரங்கள் வளர்க்கப்பட்டிருக்கின்றன. ஆனால், நிலவில் ஒருபோதும் இது நடந்தது கிடையாது. ஆகையால் விண்வெளி ஆராய்ச்சியில் நீண்டகால நோக்கில் குறிப்பிடத்தக்க ஒரு முன்னேற்றமாக இது கருதப்படுகிறது.

விண்வெளி வீரர்கள் உணவுத் தேவைக்காக பூமிக்கு திரும்பி வருவதற்கான தேவை இல்லாமல், விண்வெளியிலேயே தங்களுக்கான உணவை அறுவடை செய்துகொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். ‘‘நிலவில் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் தங்களுக்கான பயிர்களை எதிர்காலத்தில் விண்வெளி வீரர்கள் வளர்ப்பதில், சமாளிக்க முடியாத பிரச்னைகள் எதுவும் இருக்காது என்பதை இது காட்டுகிறது’’ என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும்

X