உயிரிழப்பைத் தடுக்க உணவுப் பழக்கத்தில் மாற்றம்

2/12/2019 4:00:53 PM

 உயிரிழப்பைத் தடுக்க உணவுப் பழக்கத்தில் மாற்றம்

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

சுவீடனின் தலைநகரை மையமாக வைத்து இயங்கிவரும் EAT-Lancet கமிஷன் உலகெங்கும் உள்ள வேளாண்மை, பருவநிலை மாற்றம், சத்துணவு என பல துறைகளைச் சேர்ந்த 37 அறிவியல் நிபுணர்களை அங்கமாக ஒன்றுசேர்த்து வருங்கால மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்றவகையில் புதிய உணவு வகைகளுக்கான ஆராய்ச்சி மேற்கொண்டது. சுமார் இரண்டு ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து, ‘புவி சார்ந்த ஆரோக்கியத்துக்கான உணவு வகைகளை’ அறிமுகப்படுத்தியுள்ளது நிபுணர் குழு.  

நாம் சாப்பிடும் உணவில் பாதியளவு பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்க்க வேண்டும் என்பதை ஆய்வு கூறுகிறது. ஐரோப்பாவும் வட அமெரிக்காவும் சிவப்பு மாமிசத்தின் தேவையைக் குறைத்துக்கொள்ள வேண்டும். கிழக்கு ஆசியா மீன் தேவையைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ஆப்பிரிக்காவில் மாவுச்சத்துள்ள காய்கறிகளைக் குறைக்க வேண்டும்.

மேலும் உணவுப் பழக்கத்தை மாற்றுவதற்கு, சிவப்பு மாமிசத்தின் மீது வரி விதிப்பது தேவையான ஒரு விஷயமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மாற்றம் செய்யப்பட்ட இந்த உணவுப் பழக்கத்தை கடைப்பிடித்தால் ஆண்டுதோறும் 11 மில்லியன் பேர் இறப்பதை தடுக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். EAT-Lancet கமிஷனின் இந்த ஆய்வறிக்கையானது, அனைத்து நாடுகளுக்கும் மற்றும் உலக சுகாதார நிறுவனம் போன்ற அமைப்புகளிடமும் கொண்டு செல்லப்படவிருக்கிறது.

மேலும்

X