டெக் திருவிழா 2019

2/12/2019 4:01:35 PM

டெக் திருவிழா 2019

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் சமீபத்தில் 2019 ஆம் ஆண்டிற்கான டெக்னாலஜி திருவிழா நடைபெற்றது. ஆப்பிள், சாம்சங், இன்டெல் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் உட்பட மொத்தம் 150 நாடுகளிலிருந்து சுமார் 4,500 தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்குபெற்ற இத்திருவிழாவில் பல நவீன தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

பெரு நிறுவனங்கள் மட்டுமில்லாமல் தனிநபர்களும் தாங்கள் கண்டுபிடித்த புதுப்புது எலெக்ட்ரானிக் சாதனங்களைக் காட்சிப்படுத்தும் வகையில் திருவிழா நடந்தது. வாட்டர் ப்ரூஃப் கம்ப்யூட்டர், ரீடிங் ரோபோ, 3டி பிரின்டிங், 8K ஸ்மார்ட் டிவி, சலவை செய்த துணியை மடித்துவைக்கும் இயந்திரம், 5ஜி தொழில்நுட்பம் என பல லேட்டஸ்ட் டெக்னாஜி கருவிகள் இத்திருவிழாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. தண்ணீருக்குள்ளும் ஸ்மார்ட் போனை பயன்படுத்தும் வகையில் நவீன டச் டெக்னாலஜியை அறிமுகப்படுத்தி சென்செல் நிறுவனம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

மேலும்

X