இயற்கைப் பேரிடரில் உதவும் வாக்கிங் கார்

2/12/2019 4:02:23 PM

இயற்கைப் பேரிடரில் உதவும் வாக்கிங் கார்

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

தென்கொரியாவை சேர்ந்த கார் நிறுவனமான ஹுண்டாய், மணிக்கு ஐந்து கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் ‘வாக்கிங் கார்’ என்ற நடக்கும் விதமான காரை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. ‘தொழில்நுட்பம் உலகுக்கு அளித்திருக்கும் கொடை இது’ என சமூக ஆர்வலர்கள் கொண்டாடும் இந்த கார் சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கைப் பேரிடர் காலங்களில் மீட்புப் பணிக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மக்களை மீட்கவும், கரடு முரடான மலைப்பகுதிகள், செங்குத்தான மலைத்தொடர்கள் மற்றும் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளைக் கடந்து செல்லும் வகையில் ரோபோட்டிக் கால்கள் பொருத்தப்பட்டுள்ளது. இடிந்து போன கட்டடக் குவியல்கள் மற்றும் வெள்ளம் பாதித்த சேற்று நிலங்களிலும் எவ்வித சிரமுமின்றி பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த கார். மேலும் இந்த கார் மக்களின் சேவைக்கானது; விற்பனைக்கு அல்ல என்பது கூடுதல் சிறப்பம்சம்.

மேலும்

X