விண்வெளி சுற்றுலா செல்ல புதிய முயற்சி!

4/9/2019 4:48:14 PM

விண்வெளி சுற்றுலா செல்ல புதிய முயற்சி!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

விண்வெளிக்கு மனிதர்களை சுற்றுலா அழைத்துச் செல்வதையே குறிக்கோளாக கொண்டு தொடங்கப்பட்ட தனியார் நிறுவனம்தான் அமெரிக்க தொழிலதிபரான எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். விண்வெளியில் மனிதர்கள் உலாவருவதற்கான நடைமுறை சிக்கல்களைத் தொடர்ந்து ஆராய்ந்து பல்வேறு சோதனைகளை செய்துவருகிறது
இந்நிறுவனம். இதற்கிடையில் சமீபத்தில் டிராகன் எனப் பெயரிடப்பட்ட விண்கலத்தைச் சோதனை ஓட்டத்திற்காக விண்ணில் செலுத்தியுள்ளது.

விண்வெளியில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் தானாகவே சென்று இணையும்படி வடிவமைக்கப்பட்ட அந்த விண்கலம் மனித உருவுள்ள டம்மியை விண்வெளிக்கு அழைத்துச் சென்று சாதனை படைத்துள்ளது. சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்த முதல் தனியார் விண்கலம் என்ற பெயரும் பெற்றுள்ளது டிராகன். சோதனை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக விண்வெளி வீரர்களை அனுப்பி சோதனை செய்யவிருக்கிறது ஸ்பேஸ் எக்ஸ். இந்த விண்கலத்தில் சுமார் ஆறுபேர் வரை பயணிக்கலாம். இந்த வருடத்திற்குள் விண்வெளிக்கு மக்களை அழைத்துச் செல்லவேண்டும் என பெருங்கனவுடன் செயல்படுகிறார் எலான் மஸ்க்.

‘‘விண்வெளிப் பயணம் என்பது காரில் செல்வது போன்று சொகுசானது அல்ல. பூமியை விட்டு மேலே செல்லச் செல்ல புவிஈர்ப்பு விசை குறைந்து நம் உடலைக் கடுமையாக அழுத்தும். அது பயணிகளுக்கு மோசமான அனுபவத்தை கொடுக்கலாம். இதைத் தவிர்த்து ஒரு சொகுசான விண்வெளிப் பயண அனுபவத்தை வழங்குவதே எங்கள் நோக்கம்.’’ என்று தெரிவித்திருக்கிறார் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரியான எலான் மஸ்க்.

X