பசுமையை ஏற்படுத்திய இந்தியா மற்றும் சீனா!

4/9/2019 4:49:32 PM

பசுமையை ஏற்படுத்திய இந்தியா மற்றும் சீனா!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம், காடுகளை அழித்து நகரங்கள் அமைத்தல் மற்றும் அதீத கார்பன் வெளியீடுகள் என பூமியானது பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுவருகிறது. புவியில் ஏற்படும் மாசுகளைக் குறைப்பதற்காக கார்பன் வரி, இயற்கை சார்ந்த வாழ்வு முறைக்கு திரும்புவது என உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு செயல்திட்டங்களைத் தீட்டிவருகின்றன. அதில் ஒன்றுதான் அதிக மரங்களை நட்டு பசுமையை ஏற்படுத்துவது.

கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆசிய கண்டத்தில் சீனா மற்றும் இந்திய பிராந்தியங்களில் அதிக அளவு மரங்களை நட்டு பசுமையை ஏற்படுத்தியதாக கூறுகிறது நாசாவின் சமீபத்திய ஆய்வு ஒன்று. இன்றைய உலகத்தின் பசுமைக்கு இந்தியாவும் சீனாவும்தான் முதன்மைக் காரணமாக விளங்குவதாக ஆய்வு உறுதி செய்துள்ளது.

நாசாவின் செயற்கைக்கோள் எடுத்த புகைப்படத்தை அடிப்படையாகக்கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், உலகம் வேகமாக பசுமையாக மாறிவருவதாகவும், கடந்த இருபது ஆண்டுகளில் ஐந்து சதவீதம் அளவுக்கு உலகம் பசுமையாக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு முக்கியக் காரணமாக சீனாவும் இந்தியாவும் இருக்கின்றன என்பதையும் விளக்குகிறது அந்த ஆய்வு. பொருளாதார முன்னேற்றத்திற்காக நிலம், நீர் மற்றும் வளங்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்துவதும், இந்தியாவில் ஒருநாளைக்கு எட்டு லட்சம் மரங்கள் நடப்படுவதும்தான் இத்தகைய பசுமைக்கு முக்கிய காரணிகளாக விளங்குவதாக நாசாவின் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

X