ஆன்லைனில் நடத்தப்படும் கணினி ஆசிரியர் தேர்வு

4/10/2019 4:03:15 PM

ஆன்லைனில் நடத்தப்படும் கணினி ஆசிரியர் தேர்வு

நன்றி குங்குமம் சிமிழ் கல்வி-வேலை வழிகாட்டி

விரைவில் நடைபெறவுள்ள கணினி ஆசிரியர் தேர்வு முதன்முதலாக ஆன்லைன்வழியில் நடத்தப்பட உள்ளது. சமீபத்தில் இத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பொதுவாக அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு, அரசு சட்டக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு, உதவி தொடக்கக் கல்வி அதிகாரி (தற்போது வட்டாரக் கல்வி அலுவலர்) தேர்வு, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் தேர்வு, முதுநிலை விரிவுரையாளர் தேர்வு, சிறப்பாசிரியர் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளுக்குக் குறைந்த எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்களே விண்ணப்பிப்பார்கள்.

எனவே இருக்கின்ற சூழலைப் பார்த்து குறைந்த எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் பங்கேற்கும் தேர்வுகளை ஆன்லைன் வழியாகவும், ‘டெட்’ எனப்படும் தகுதித் தேர்வுக்கு சாதாரணமாக 7 லட்சம் பேர் விண்ணப்பிப்பது வழக்கம் என்பதால், அதிக விண்ணப்பதாரர்கள் கலந்துகொள்ளும் தேர்வுகளை வழக்கம்போல் ‘ஓஎம்ஆர் ஷீட்’முறையிலும் நடத்த முடிவு செய்துள்ளதாகவும், ஆன்லைன் தேர்வு முறையால் தேர்வு முடிவுகளை வெகுவிரைவாக ஒருசில வாரங்களிலேயே வெளியிட முடியும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X