முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்குக் கலந்தாய்வு

4/10/2019 4:04:12 PM

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்குக் கலந்தாய்வு

நன்றி குங்குமம் சிமிழ் கல்வி-வேலை வழிகாட்டி

ஒற்றைச் சாளர முறையின் கீழ் கலந்தாய்வு நடத்தப்பட்டு மருத்துவ மேற்படிப்புகளுக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன்படி ஏப்ரல் 1-ம் தேதி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முதலில் கலந்தாய்வு நடத்தப்படும். இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 5ம் தேதி வரையில் பொதுக் கலந்தாய்வு நடைபெறும். மே 1-முதல் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான வகுப்புகள் தொடங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு 124 இடங்களை அதிகரிக்க மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்திருந்தது. இதனிடையே பல ஆண்டு காலமாக இருந்து வரும் முதுநிலை மருத்துவப் பட்டயப்படிப்பு இடங்களை, பட்ட மேற்படிப்புகளாக மாற்றுவதற்கு மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகமும் அண்மையில் விண்ணப்பித்திருந்தது. அதனைப் பரிசீலித்த இந்திய மருத்துவ கவுன்சில் வாரிய உறுப்பினர்கள், 384 பட்டயப்படிப்பு இடங்களைப் பட்டப்படிப்புகளாக மாற்ற தற்போது அனுமதி அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, வரும் கல்வியாண்டில் (2019-20) மாநிலத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் 1,758-ஆக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

X