தொலைதூரக் கல்வி முறையில் வேளாண் பட்டப்படிப்புகளுக்குத் தடை

4/10/2019 4:06:28 PM

தொலைதூரக் கல்வி முறையில் வேளாண் பட்டப்படிப்புகளுக்குத் தடை

நன்றி குங்குமம் சிமிழ் கல்வி-வேலை வழிகாட்டி

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் அறிவுறுத்தலின்படி, வரும் ஜூலை மாதம் முதல் தொலைதூர முறையில், வேளாண் பட்டப்படிப்புகள் நடத்த தடை விதித்து, பல்கலை மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.பல்கலை மானியக்குழு கண்காணிப்பில், நாட்டில் பல்வேறு பல்கலைகள், தொலைதூரக்  கல்வி முறையைச் செயல்படுத்தி வருகின்றன. இதன் விதிமுறைகளின்படி, தொழில் சார்ந்த படிப்புகளான பொறியியல், மருத்துவம், பிசியோதெரபி, பல் மருத்துவம், பார்மசி, நர்சிங், ஆர்க்கிடெக்சர் போன்ற படிப்புகளைத்  தொலைதூர கல்வி முறையில் வழங்க இயலாது.

இந்நிலையில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் அறிவுறுத்தலின்படி, வேளாண் பட்டப் படிப்புகளையும், தொலைதூர முறையில் வழங்கத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைதூரக்  கல்வி முறையில், 2019- - 20ம் கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை, ஜூலை மாதம் முதல் தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தடை  ஜூலை மாதம் முதலே நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், தொலைதூரக்  கல்வி முறையில் வேளாண் பட்டப்படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

X