பி.எட். தொலைநிலைக் கல்வி மாணவர் சேர்க்கை

5/13/2019 3:40:06 PM

பி.எட். தொலைநிலைக் கல்வி மாணவர் சேர்க்கை

நன்றி குங்குமம் கல்வி-வேலை வழிகாட்டி

மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி மையத்தில் பி.எட். (பேச்சுலர் ஆஃப் எஜுகேஷன்) படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இது இரண்டு ஆண்டுகள் கால அளவு கொண்ட படிப்பு.

கல்வித் தகுதி : தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், சுற்றுச்சூழல் அறிவியல், வரலாறு, புவியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஜியோ-பிசிக்ஸ், பயோ-பிசிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி, அப்ளைடு கெமிஸ்ட்ரி, பயோ-டெக்னாலஜி, மைக்ரோ-பயாலஜி உட்பட ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். பள்ளியில் ஆசிரியராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கூடுதல் தகுதி குறித்த தகவல்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 14.6.2019. மேலும் விவரங்களுக்கு http://mkuniversity.ac.in

X