கோடைகால சிறப்புப் பயிற்சி வகுப்புகளுக்கு தடை

5/13/2019 3:41:04 PM

கோடைகால சிறப்புப் பயிற்சி வகுப்புகளுக்கு தடை

நன்றி குங்குமம் கல்வி-வேலை வழிகாட்டி

 

கோடை விடுமுறை காலத்தில் தனியார் பள்ளிகள், மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், ‘உறவினர்களோடு பழகவும், உறவுகளைப் பற்றி தெரிந்துகொள்ளவும் மாணவர்களுக்கு விடுமுறை என்பது அவசியம்.

கோடை காலங்களில் வெப்பம்  சார்ந்த நோய்கள் ஏற்படக்கூடும். இதனால் மாணவர்களுக்கு கட்டாயம் ஓய்வு அவசியம். எனவே, மாணவர்கள் நலன் கருதி  தனியார் பள்ளிக்கூடங்கள் மாணவ மாணவியருக்கு கோடை காலங்களில் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது. கோடைகாலங்களில் பயிற்சி வகுப்புகள் நடத்துவது பற்றி பெற்றோர் தரப்பில் புகார்கள் அளிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

X