பயிற்சி வகுப்பில் சேர அரிய வாய்ப்பு!

5/14/2019 5:08:35 PM

பயிற்சி வகுப்பில் சேர அரிய வாய்ப்பு!

நன்றி குங்குமம் கல்வி-வழிகாட்டி

* அட்மிஷன்

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளால்தான் ஒரு மாணவனுக்கு தரமான பயிற்சி அளிக்க முடியும் என்று உணர்ந்து அதையே நோக்கமாக கொண்டு 2013ம் ஆண்டு  ஒரு பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. அதுதான் சென்னை அண்ணாநகரில் இயங்கி வருகிறது கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி. முழுக்க முழுக்க பணியில் உள்ள மற்றும் முந்தைய ஐ.ஏ.எஸ்., ஐ.ஆர்.எஸ், ஐ.ஆர்.எ.எஸ். போன்ற சிவில் சர்வீஸ் அதிகாரிகளால் இம்மையத்தில் பயிற்சி வழங்கப்பட்டுவருகிறது. இதன் செயல்பாடுகள் மற்றும் பயிற்சித் திட்டங்கள் குறித்து பயிற்சி மைய நிறுவனர் பூமிநாதன் பகிர்ந்துகொண்ட தகவல்களைப் பார்ப்போம்…

‘‘வெறும் வணிகம் சார்ந்த பயிற்சி மையமாக செயல்படாமல், தரமான பயிற்சியை சேவை மனப்பான்மையுடன் வழங்குவதே தங்கள் கடமையென கொண்டுள்ளது கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி. 2018-19 ஆண்டிற்கான சிறந்த சிவில் தேர்வு பயிற்சி மையம் என்ற விருதும் பெற்றுள்ளது இந்நிறுவனம்.  மேலும் 2018ம் ஆண்டு நடந்த சிவில் தேர்வுகளில் கிங் மேக்கர்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற சுமார் ஐம்பது மாணவர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.

தமிழக அளவில் முதலிடம் பெற்ற C.A ரிஷப், இந்நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்தான். இந்நிறுவனத்தில் 2019-20 ஆண்டிற்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், குருப் - 1 மற்றும் குருப் -2 போன்ற தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கிறது. மேலும் மூன்று வருட கால அளவிலான ஒருங்கிணைந்த ஐ.ஏ.எஸ் பயிற்சி டிகிரிக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பும் வெளியாகியுள்ளது.’’ என்கிறார் பூமிநாதன்.

வழங்கப்படும் பயிற்சிகள் மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி கூறும்போது, ‘‘பொது அறிவு மற்றும் திறனாய்வுத் தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 100% ஸ்காலர்ஷிப் வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ். பயிற்சிக்குத் தேவையான மொத்தம் பதினெட்டு புத்தகங்களும் இலவசமாக மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஹைடெக் கிளாஸ் ரூம், தரமான உட்கட்டமைப்பு வசதி, ஆரோக்கியமான ஹாஸ்டல் சூழல் என சிறப்பான சூழலில் தரமான ஐ.ஏ.எஸ். பயிற்சி வழங்கப்பட்டுவருகிறது.

மேலும் சேவை மனப்பான்மையுடன்கூடிய அனுபவமிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகளால் பயிற்சி வழங்கப்படுவது என்பது கூடுதல் சிறப்பு. தேர்வுகளுக்குத் தேவையான அப்டேட்டட் ஸ்டடி மெட்டீரியல்கள் மற்றும் சிவில் தேர்வு எழுதும் அனைவரும் பயன்படுத்தும் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி ஆப் ஆகியன மாணவர்கள் எளிமையாக தேர்வை எதிர்கொள்ள வழிவகை செய்கின்றன’’ என்று பெருமிதத்தோடு தெரிவித்தார்.

‘‘நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் ஆப்பில் பதிவேற்றுதல், தினமும் 20 வகையான அப்ஜெக்டிவ் டைப் கேள்விகள் மற்றும் நடப்பு நிகழ்வுகளுக்காக ஓவ்வொரு வாரமும் தனியாக நேரம் ஒதுக்குதல் என நடப்பு நிகழ்வுகளுக்கென பிரத்யேக செயல்பாடுகள் தேர்வுகளில் நடப்பு நிகழ்வு சார்ந்த கேள்விகளை எதிர்கொள்ள மாணவர்களைத் தயார்படுத்துகிறது. தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழ்மொழியில் ஸ்டடி மெட்டீரியல் வடிவமைத்து மாணவர்களை தங்கள் தாய்மொழியில் தேர்வு எழுத செய்து முன்னோடியாக செயல்படுகிறது கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி’’ என்று மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார் பூமிநாதன்.    

- குரு

X