ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

5/16/2019 5:06:20 PM

ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

இந்திய ரயில்வே துறையில், மினிஸ்டீரியல் & ஐசோலேட்டட் பிரிவில் உள்ள ஜூனியர் ஸ்டெனோகிராஃபர், சட்ட உதவியாளர், தலைமை சமையற்காரர் / சமையற்காரர் உள்ளிட்ட 30 வெவ்வேறு பணிகளுக்கான வேலைவாய்ப்பு குறித்த தேர்வு பற்றிய அறிவிப்பு ஏற்கெனவே வெளியாகியிருந்தது. மொத்தம் 1,665 காலிப்பணியிடங்கள். அறிவிப்பு வெளியான தேதி 23.02.2019.

தற்போது ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் 7.4.2019-லிருந்து 22.4.2019 வரை கூடுதலாக 15 நாட்கள் அதிகரித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கணினி வழித்தேர்வு ஜூன் - ஜூலை 2019ல் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு https://chennai.rly-rect-appn.in/rrbmic2019 என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

X