பால்வளம் சார்ந்த படிப்புகளும் வேலை வாய்ப்புகளும்!

7/18/2019 3:13:52 PM

பால்வளம் சார்ந்த படிப்புகளும் வேலை வாய்ப்புகளும்!

நன்றி குங்குமம் கல்வி - வழிகாட்டி  

வழிகாட்டல்

பால் மற்றும் பால் பொருட்கள் ஊட்டச்சத்து மிகுந்த மற்றும் ஆரோக்கியமான உணவுகள் ஆகும். இதில் இயற்கையான ஊட்டச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், உடன் லாக்டின் (புரதம்), லாக்டோசு (இரட்டைச்சர்க்கரை) உள்ளிட்டவை அடங்கியுள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கால்சியம் சத்துக்கு அவசியமான உணவுப் பொருள் பால்.

பாலின் வேதியியல் மாற்றங்களின் மூலம் பாலிலிருந்து பல உபபொருட்களைப் பெறலாம். அப்படி பாலிலிருந்து பல்வேறு உணவுப்பொருட்கள் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் தயாரிக்கப்பட்டுவருகின்றன. வல்லரசு நாடுகளில் பால் உற்பத்திக்கான கால்நடை வளர்ப்பு என்பது பெரும் புரட்சியாக கருதப்பட்டு  மேம்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 26.90% பங்களிப்பை செலுத்தி வருகிறது விவசாயத்துறையில் அடங்கும் கால்நடை வளர்ப்புத்துறை. 2017-18ம் ஆண்டுகளில் 176.3 மில்லியன் டன் பாலை உற்பத்தி செய்து உலக அளவில் முன்னணி நாடாக வலம் வருகிறது இந்தியா. இதனால் பால்வளம் சார்ந்த தொழில்துறைகள் இந்தியாவில் வேகமாக வளர்ந்துவருகின்றன. இதன் விளைவாக தொழில்துறைகளில் பணிபுரிய தொழில்முறை பயிற்சி பெற்றவர்களின் தேவை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

ஆகவே, பால்வளம் (Dairy) சார்ந்த படிப்புகளின் தேவையும் இன்றியமையாததாக உள்ளது. இந்தியாவில் பால்வளம் சார்ந்த படிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுவருகிறது. அதன் காரணமாகவே இந்தியாவின் முன்னணி வேளாண் மற்றும் விலங்கு அறிவியல் (animal science) கல்விநிறுவனங்கள், பால்வளம் சார்ந்த பல்வேறு இளநிலை, முதுநிலைப் பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்கிவருகிறது.

பால் உற்பத்தியாளர்கள், அது சார்ந்த தொழில்முனைவோர் மற்றும் நுகர்வோர்களுக்கு இடையே ஓர் இணைப்பை ஏற்படுத்துவதையும், தொழில்முறைப் பயிற்சி பெற்றவர்களை உருவாக்குவதையும் தங்கள் நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன இக்கல்வி நிறுவனங்கள்.

வழங்கப்படும் படிப்புகள்

இந்தியாவின் முன்னணி அரசு மற்றும் தனியார் கல்விநிறுவனங்கள் பால்வளம் சார்ந்த பல்வேறு  பட்டம், பட்டயம், சான்றிதழ், மேலாண்மை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்கிவருகின்றன.

பட்டயப்படிப்புகள்

*Diploma in Dairy Technology
*Diploma in Food and Dairy Technology
*Advanced Diploma in Dairy Science and Technology

இளங்கலைப் படிப்புகள்

பால் உற்பத்தி மற்றும் அது சார்ந்த உட்பொருட்கள் பற்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்பே நான்கு வருட கால அளவிலான டெய்ரி டெக்னாலஜி (B.Tech in Dairy Technology)) படிப்பாகும்.

முதுகலைப் படிப்புகள்

*M.Tech in Dairy Microbiology
*M.Tech in Dairy Technology
*M.Tech in Animal Biochemistry
*M.Tech in Animal Nutrition
*M.Tech in Animal Biotechnology
*M.Sc in Dairy Chemistry
*M.Sc in Dairy Science
*M.Tech in Dairy Management

ஆராய்ச்சிப் படிப்புகள்

*Ph.d in Dairy Chemistry
*Ph.d in Dairy Microbiology

கல்வித் தகுதி

+2வில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை முதன்மைப் பாடங்களாகத் தேர்வுசெய்து படித்து 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது நான்கு வருட கால அளவிலான இளங்கலைப் படிப்பிற்கான கல்வித் தகுதியாக கருதப்படுகிறது. எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கு 10% மதிப்பெண்களில் தளர்வு அனுசரிக்கப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்போகும் துறைகளுக்கு ஏற்ப இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பது முதுகலைப் படிப்பிற்கான கல்வித் தகுதியாக கருதப்படுகிறது. பெரும்பாலான மாநில அரசுக் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் அனைத்து படிப்புகளுக்கும், அரசு வேளாண் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகளின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. மேலும் தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகளின் வாயிலாகவும் மாணவ சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

வேலை வாய்ப்பு

பால் உற்பத்தியில் இந்தியா முன்னணியில் உள்ளதால் தொழில்முறைப் பயிற்சி பெற்றவர்களின் தேவை அதிகமாக உள்ளது. பால் உற்பத்தி, பால் பொருட்கள் பதப்படுத்துதல், பால் கொள்முதல், சேமிப்பு மற்றும் விநியோகம் என மொத்தம் நானூறுக்கும் மேற்பட்ட தொழில் துறைகள் இந்தியாவில் இயங்கிவருகின்றன. ஆகையால் அரசு மற்றும் தனியார் தொழில்நிறுவனங்களில் டெய்ரி டெக்னாலஜிஸ்ட்டுகளின் தேவை அதிகமாக உள்ளது.

மேலும் உணவுப் பொருட்கள் தயாரிப்புத் தொழிற்சாலைகள், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், தர மேம்பாட்டு நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு பெருகிவருகிறது. தொழில்முறை பயிற்சி பெற்று டிகிரி முடித்தவர்கள் Dairy Scientists, Dairy Researcher, Dairy Engineers, Dairy Consultants, Dairy Pharmacist, Production Executive, Dairy Extension Officer போன்ற பதவிகளில் பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.

பாடப்பிரிவு உள்ள சில கல்வி நிறுவனங்கள்

lCollege of Dairy Technology, Sri Venkateswara Veterinary university (SVVU), Tirupati.
lSanjay Gandhi Institute of Dairy Technology, Bihar Animal Science university, (BASU) Patna.
lSheth M.C. College of Dairy Science, Anand Agricultural University, Anand, Gujarat.
lCollege of Dairy Science, Kamadhenu University, Gandhinagar, Gujarat.
lICAR-National Dairy Research Institute (NDRI), Karanal, Haryana.
lCollege of Food and Dairy Technology, Tamilnadu Veterinary and Animal Sciences University, Chennai, Tamilnadu.

-வெங்கட்

X