அடுத்த ஆண்டு வரை கொண்டாடப்படும் காந்தி ஜெயந்தி

10/14/2019 12:46:07 PM

அடுத்த ஆண்டு வரை கொண்டாடப்படும் காந்தி ஜெயந்தி

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திரக் காற்றை வெள்ளையர்களிடம் அகிம்சை வழி போராட்டங்களால் நமக்கு பெற்றுத்தந்தவர் நம் தேசத் தந்தை மகாத்மா காந்தி என்பதை நாம் அறிவோம். இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாள் அக்டோபர் 2. இது இந்தியாவில் ஒரு தேசிய விடுமுறை நாளாகும். இந்நாள் ஆண்டுதோறும் இந்தியாவில் தேசிய அளவில் காந்தி ஜெயந்தி (Gandhi Jayanti) என்று கொண்டாடப்பட்டுவருகிறது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜூன் 15, 2007-ல் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின்படி இந்நாள் ‘அனைத்துலக வன்முறையற்ற நாளாக’ அனைத்து நாடுகளிலும் கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு காந்தியடிகளின் 150வது பிறந்த நாளை மத்திய அரசு விமரிசையாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி வரை காந்தி ஜெயந்தி கொண்டாட்டத்தை நடத்த கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், காலாண்டுத் தேர்வுகள் முடிந்து விடுமுறை முடிந்த நிலையில் 3ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். மீண்டும் திறந்ததும், அக்டோபர் 3 முதல் காந்தி ஜெயந்தி விழாவை நடத்த, பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. விடுமுறைகளில், காந்தியை ஓவியமாக வரையவும், காந்தி குறித்த பொன்மொழிகளை எழுதவும், காந்தியின் போராட்ட வாழ்க்கை குறித்து கட்டுரை எழுதவும், மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும்

X