தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு பார் கவுன்சில் நோட்டீஸ்

10/23/2019 12:04:31 PM

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு பார் கவுன்சில் நோட்டீஸ்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

சட்டப் படிப்பு முடித்த பின், வழக்கறிஞராக பயிற்சி மேற்கொள்ள, பார் கவுன்சிலில் பதிவு செய்யவேண்டும். அவ்வாறு பதிவு செய்த பின் இரண்டு ஆண்டுகளுக்குள் பார் கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெறவில்லை என்றால் அவர்கள் வழக்கறிஞராக பயிற்சி செய்ய முடியாது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் வரை, வழக்கறிஞர் தொழில்புரிவதை, பார் கவுன்சில் நிறுத்திவைக்கும். பார் கவுன்சில் ஆவணங்களை பரிசீலித்த வகையில், 2010 ஜூலை மாதத்துக்குப் பின் பதிவு செய்தவர்களில், 1547 பேர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதது தெரியவந்துள்ளது.

தேர்ச்சி பெறாதவர்களின் பட்டியல், பார் கவுன்சில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.வழக்கறிஞர் சங்கங்களுக்கும், பட்டியல் அனுப்பப்பட்டுள்ளதாக பார் கவுன்சில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், அதற்கான ஆதாரங்களை உடனடியாக அனுப்பும்படி, இறுதி நோட்டீசும் பிறப்பித்துள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கையாக, இவர்கள் வழக்கறிஞராக தொழில்புரிவதை, பார் கவுன்சில் நிறுத்திவைக்கும். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின், தடையை பார் கவுன்சில் நீக்கிவிடும்.

X