பருவமழை தொடங்கியதால் பாடங்களை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்!

11/12/2019 4:09:26 PM

பருவமழை தொடங்கியதால் பாடங்களை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களின் முக்கிய நீராதாரமான, வடகிழக்குப் பருவமழை, தொடங்கிவிட்ட சூழ்நிலையில் டிசம்பர் இறுதிவரை, வெளுத்துக் கட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடகிழக்குப் பருவமழையால் வட மாவட்டங்களில் நீர்நிலைகள் நிரம்பி, வெள்ளப்பெருக்கு ஏற்படுவது இயல்பு. தொடர்ந்து, பல நாட்கள் மழை பெய்யும் என்பதால் பள்ளிகளுக்கு, மழையால் அவ்வப்போது விடுமுறை விடப்படும்.

இந்த ஆண்டு பருவமழையால், விடுமுறை விடப்பட்டால் அதை சமாளிக்கும் வகையில், ஆசிரியர்கள் தயாராக வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை கூறியுள்ளது. இரண்டாம் பருவத் தேர்வுகள், டிசம்பரில் நடத்தப்படும் நிலையில், அதற்கான பாடங்களை விரைந்து முடிக்க வேண்டும். பருவமழையால் பள்ளி வேலைநாட்கள் பாதிக்கப்பட்டாலும், மாணவர்கள் பாதிக்காமல் கூடுதல் நேரம் ஒதுக்கி, பாடங்களை நடத்த வேண்டும் என, ஆசிரியர்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன.

X