10ம் வகுப்பு, 11, 12 பொதுத்தேர்வு எழுத நேரம் அதிகரிப்பு!

11/13/2019 2:46:15 PM

10ம் வகுப்பு, 11, 12 பொதுத்தேர்வு எழுத நேரம் அதிகரிப்பு!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச்- ஏப்ரல் மாதங்களில் நடைபெறும். இதில் கடந்த காலங்களில் பொதுத்தேர்வு எழுத மாணவ-மாணவிகளுக்கு 2.30 மணி நேரம் கால அவகாசமாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது 10, 11, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுத அரை மணி நேரம் அதிகரித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது பொதுத்தேர்வு எழுத மூன்று மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட உள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய பாடத்திட்டத்தினால் பொதுத் தேர்வு எழுத கூடுதல் நேரம் தேவைப்படும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X