பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத்தீனி விற்க தடை!

11/19/2019 11:56:54 AM

பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத்தீனி விற்க தடை!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளி கேன்டீன்களில் நொறுக்குத் தீனிகளை விற்பதற்கும், அது தொடர்பான விளம்பரங்கள் வைப்பதற்கும் மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத்துறை தடை விதித்துள்ளது. குழந்தைகளிடம் நொறுக்கு தீனி சாப்பிடும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகச் சிறு வயதிலேயே உடல் ரீதியிலான குறைபாடுகளும், மன ரீதியிலான பாதிப்புகளும் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மத்திய உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், ‘பள்ளி கேன்டீன்களில் சிற்றுண்டி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படுகிறது. அவற்றில் பெரும்பாலும், நொறுக்குத்தீனிகள் தான் உள்ளன. அதிக கொழுப்பு, காரம், அதிக உப்பு அல்லது இனிப்பு நிறைந்த உணவுகள் கேடு விளைவிக்க கூடியது. எனவே, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளின் கேன்டீன்களில் நொறுக்குத்தீனி விற்கவும், அது தொடர்பான விளம்பரப் பதாகைகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது.

கேன்டீன் மட்டுமல்லாமல், பள்ளிகளைச் சுற்றி 50 மீட்டர் சுற்றளவில் உள்ள கடைகளுக்கும் இந்தத் தடை உத்தரவு பொருந்தும். மாணவர்களின் நலனைப் பேணும் வகையில் அனைத்துப் பள்ளிகளும் இதை நடைமுறைப்படுத்த வேண்டும். மாணவர்கள் நொறுக்குத்தீனி சாப்பிடுகிறார்களா என பள்ளி நிர்வாகம் சார்பில் தனிக்குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X