கணித ஆய்வுப் படிப்புக்கு உதவித்தொகை

12/7/2016 12:25:24 PM

கணித ஆய்வுப் படிப்புக்கு உதவித்தொகை

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

மத்திய அரசின் கீழ் செயல்படும், நேஷனல் போர்டு ஃபார் ஹையர் மேத்தமெடிக்ஸ் (என்.பி.எச்.எம்.) கணிதத்தில் ஆய்வு செய்ய விரும்பும் மாணவர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் கணிதம் அல்லது புள்ளியியல் துறையில் பி.எஸ்., எம்.ஏ., எம்.எஸ்சி. போன்ற ஏதேனும் ஒரு பட்டம் பெற்று, பிஎச்.டி. (கணிதம்) பட்டப்படிப்பில் சேர்க்கை பெற்றிருப்பவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். எச்.ஆர்.ஐ., ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., மற்றும் ஐ.எம்.எஸ்.சி. போன்ற கல்வி நிறுவனங்களில் ஒருங்கிணைந்த பிஎச்.டி. படிப்பில் சேர்க்கை பெற விரும்புபவர்களும், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். உதவித்தொகை 25 ஆயிரம் முதல்- 32 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 9.12.2016
மேலும் விவரங்களுக்கு: www.nbhm.dae.gov.in

X