ஒற்றைப் பெண் குழந்தை உதவித்தொகை

12/7/2016 12:26:44 PM

ஒற்றைப் பெண் குழந்தை உதவித்தொகை

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.சி. ‘மெரிட் ஸ்காலர்ஷிப்’திட்டத்தின் கீழ் ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கான உதவித்தொகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சி.பி.எஸ்.சி., கல்வி முறையில், பிளஸ் 1 அல்லது பிளஸ் 2 படித்துக்கொண்டிருக்க வேண்டும். மேலும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற, ஒற்றைப் பெண் குழந்தைகள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். மாதாமாதம் ரூ.500 உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.12.2016
மேலும் விவரங்களுக்கு: www.cbse.nic.in

X