இந்து சமய அறநிலையத்துறையின் உதவித்தொகையோடு நாதஸ்வரம், தவில் வாசிப்பு கற்கத் தயாரா?

6/8/2017 10:19:18 AM

இந்து சமய அறநிலையத்துறையின் உதவித்தொகையோடு நாதஸ்வரம், தவில் வாசிப்பு கற்கத் தயாரா?

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பழனி, தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் நாதஸ்வரப் பள்ளி மற்றும் வேத சிவாகமப் பாடசாலை போன்றவற்றில் நாதஸ்வரம், தவில் மற்றும் வேத சிவாகமப் பயிற்சி பெற விரும்புபவர்கள், அதற்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது.

நாதஸ்வரப் பள்ளி
நாதஸ்வரப் பள்ளியில் நாதஸ்வரப் பயிற்சி - 40 இடங்கள், தவில் பயிற்சிக்கு - 30 இடங்கள் உள்ளன. மூன்று ஆண்டு பயிற்சியில் 10- 15 வயதுக்குட்பட்ட இசை ஆர்வம் கொண்டவர்கள் சேர்ந்து படிக்கலாம். 5 ஆம் வகுப்பு தேர்ச்சி தேவை. இப்பயிற்சி பெற்றவர்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கோயில்களில் இசைப்பணி வாய்ப்பைப் பெற முடியும். மேலும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இசை ஆசிரியராகப் பணியாற்றலாம்.

வேத சிவாகமப் பாடசாலை
ஐந்தாண்டு பயிற்சிக்கு 12-16 வயதுக்குட்பட்ட உபநயனம் மற்றும் சிவதீட்சை பெற்றவர்கள் தகுதியானவர்கள். 5 ஆம் வகுப்பு தேர்ச்சி தேவை. இப்பயிற்சி பெற்றவர்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கோயில்களில் அர்ச்சகராகப் பணியாற்றலாம்.

விண்ணப்பம்
தங்களுடைய வயது, கல்வித்தகுதி போன்றவைகளுடன் பயிற்சியில் சேர்வதற்கான வேண்டுதல் கடிதத்தில், பயிற்சியினைத் தலைப்பில் குறிப்பிட்டு, ”இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில், பழனி எனும் முகவரிக்கு 14-6-2017 ஆம் தேதிக்குள் அனுப்பித்தர வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் மாணவ / மாணவியர்களுக்குத் தேவையான உணவு, உடை, தங்குமிடம் போன்ற வசதிகளைக் கோயில் நிர்வாகம் வழங்கும்.  வேத சிவாகமப் பாடசாலையில் பயிற்சி பெறுபவருக்கு மாதம் ரூ.1000/- ஊக்கத்தொகை உண்டு.   

விவரங்கள் அறிய, பழனியிலுள்ள நாதஸ்வரப் பள்ளி மற்றும் வேத சிவாகமப் பாடசாலை (அ) பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி கோயில் அலுவலத்திற்கு நேரடியாகச் சென்று தகவல்களைப் பெறலாம் (அ) 04545 - 242236, 242467, 241417 எனும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

- உ.தாமரைச்செல்வி

மேலும்