தொல்பொருளியலில் முதுநிலைப் பட்டயப் படிப்பு படிக்கலாம்!

8/4/2017 11:02:34 AM

தொல்பொருளியலில் முதுநிலைப் பட்டயப் படிப்பு படிக்கலாம்!

உதவித்தொகை 8 ஆயிரம்!

இந்திய அரசின் இந்தியத் தொல்பொருள் கல்வி நிறுவனம் தொல்பொருளியலில் முதுநிலைப் பட்டயப் படிப்பில் (P.G. Diploma in Archaeology) இரண்டாண்டு (2017-2019) மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

இடங்கள்
மொத்த இடங்கள் 15. இவற்றில் இந்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிகளின்படி எஸ்சி., எஸ்டி., ஓபிசி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு மற்றும் இந்தியத் தொல்பொருளியல் துறை மற்றும் மாநிலத் தொல்பொருளியல்துறை மற்றும் பல்கலைக்கழகங்களின் தொல்பொருளியல் துறைப் பணிகளிலுள்ளவர்களுக்கும் பரிந்துரை அடிப்படையில் சில இடங்கள் ஒதுக்கீடு உண்டு.

கல்வித்தகுதி
பல்கலைக்கழகத்தில் பண்டைக்காலம் (Ancient) அல்லது இந்திய இடைக்கால வரலாறு (Medieval Indian History) / தொல்பொருளியல் (Archaeology) / மானுடவியல் (Anthropology) / இந்தியச் செம்மொழிகளில் சமஸ்கிருதம் (Sanxkrit), பாலி (Pali), பிரகித் (Prakit), அரபி (Arabic) அல்லது பெர்சியன் (Persian) அல்லது  or புவியியல் (Geology with Pleistocene age Knowledge) முதுநிலைப் பட்டப்படிப்பில் 55% மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்களுக்கு 31-8-2017 அன்று 25  வயது நிறைவடைந்திருக்கக்கூடாது. எஸ்சி., எஸ்டி பிரிவினர் மற்றும் பரிந்துரைக்கப்படும் அரசுப் பணியிலிருப்பவர்களுக்கு வயதுத் தளர்வு அளிக்கப்பட்டிருக்கிறது.

விண்ணப்பம்
இந்தியத் தொல்பொருளியல் துறையின்  http://www.asi.nic.in/ எனும் இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தைத் தரவிறக்கலாம். நிரப்பிய விண்ணப்பத்துடன் “Director, Institute of Archaeology” எனும் பெயரில் புதுடெல்லியில் மாற்றும்படி, ரூ.250/-க்கான டிடியைப் பெற்று, தேவையான ஆவண நகல்களையும் இணைத்து “Director, Institute of Archaeology, Archaeological Survey of India, Red Fort, Delhi-110006” எனும் முகவரிக்குக் கடைசி நாளான 7-8-2017 ஆம் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்பித்தர வேண்டும்.  

மாணவர் சேர்க்கை
5-9-2017 அன்று புதுடெல்லியில் எழுத்துத்தேர்வு.  இதில் தகுதிபெறுபவர்களுக்கு 7-9-2017 மற்றும் 8-9-2017 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடைபெறும்.இந்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிப்படி, மாணவர்சேர்க்கை நடக்கும்.. தேர்வு செய்யப்பட்டவர்களில் அனைத்து மாணவர்களுக்கும்(பரிந்துரைக்கப்பட்ட அரசுப் பணியாளர்கள் தவிர) மாதந்தோறும் ரூ. 8000/- கல்வி உதவித்தொகை உண்டு. கூடுதல் தகவல்களுக்கு, நிறுவனத்தின் இயக்குநர் அலுவலகத்தின் 011 - 23277107 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

- தேனி மு. சுப்பிரமணி

மேலும்