மத்திய அரசின் வட்டி மானியத் திட்டங்கள்!

8/24/2017 5:39:54 PM

மத்திய அரசின் வட்டி மானியத் திட்டங்கள்!

பொருளாதாரரீதியில் பின்தங்கியுள்ள குடும்பத்தைச் சோ்ந்த மாணவர்கள், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பொதுத்துறை வங்கிகளிலும் நிதி மற்றும் மேம்பாட்டு அமைப்புகளிலும் கல்விக்கடன் வாங்கிப் படிக்கிறார்கள். கல்விக்கடன் பெற்று படிக்கும் மாணவர்களின் குடும்பப் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதற்காக மத்திய அரசு  கல்விக்கடனுக்கான பல்வேறு வட்டி மானியத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது.

1. மத்திய அரசு வழங்கும் வட்டி மானியத்திட்டம் (Central Scheme to Provide Interest Subsidy)
பொருளாதாரரீதியாகப் பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சோ்ந்த மாணவர்கள் உள்நாட்டில் படிப்பதற்காக வாங்கும் கல்விக்கடனுக்கான வட்டி மானியத் திட்டம் இது. மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் உள்ள அனுமதி பெற்ற தொழில்நுட்பத் தொழில்முறைப் பட்டப்படிப்புகளைப் படிக்கும் மாணவர்கள் கல்விக் கடனுக்கான மத்திய அரசின் வட்டி மானியச் சலுகையைப் பெறலாம்.

ஆண்டிற்கு ரூ. 4.50 லட்சம் வரை வருமானமுள்ள  குடும்பத்தைச் சோ்ந்த மாணவா–்கள் கல்விக்கடன் பெறும்போது இச்சலுகை கிடைக்கும், ஓராண்டு வரையில் அல்லது படித்துமுடித்து வேலை கிடைத்தவுடன் ஆறுமாத காலம் இதில் எது முதலில் வருகிறதோ அதுவரையிலான காலகட்டம் வரையுள்ள வட்டியை மானியமாகப் பெறலாம்.

இந்திய வங்கிகள் சங்க உறுப்பினா் வங்கிகள் மற்றும் தேசிய பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதாரம் மற்றும் மேம்பாட்டுக்கழகம், தேசிய சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், தேசிய தாழ்த்தப்பட்டோா் பொருளாதாரம் மற்றும் மேம்பாட்டுக் கழகம், தேசிய துப்புரவுத் தொழிலாளா் பொருளாதாரம் மற்றும் மேம்பாட்டுக் கழகம், தேசிய பழங்குடியினா் பொருளாதார மற்றும் மேம்பாட்டுக் கழகம் போன்ற வங்கி சாரா நிதி நிறுவனங்களில் பெறப்படும் கல்விக்கடன்களுக்கும் வட்டி மானிய சலுகைத் திட்டம் பொருந்தும், இச்சலுகையைப் பெற வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போதே மாநில அரசின் வருவாய்த் துறையிடமிருந்து பெற்ற வருமானச் சான்றிதழை இணைத்து இந்த வட்டி மானியத் திட்டத்திற்கும் விண்ணப்பம் செய்யவேண்டும்.

2. டாக்டா் அம்பேத்கா் மத்திய அரசின் வெளிநாட்டில் படிப்பதற்கான கல்விக்கடனுக்கான பிற்படுத்தப்பட்டோருக்கான வட்டி மானியத் திட்டம் (Dr. Ambedkar Central Sector Scheme of Interest Subsidy on Educational Loan for Overseas studies for other backward classes (OBCs)மற்றும் டாக்டா் அம்பேத்கா் மத்திய அரசின் வெளிநாட்டில் படிக்க விரும்பும் பொருளாதாரரீதியாகப் பிற்படுத்தப்பட்டோருக்கான கல்விக்கடனுக்கான வட்டி மானியத் திட்டம் Dr. Ambedkar Central Sector Scheme of Interest Subsidy of Educational Loan for Over Studies for Economically Backward Classes (EBCs)

வெளிநாட்டில் படிக்க விரும்பும் பிற்படுத்தப்பட்ட மாணவா–்கள் மற்றும் பொருளாதாரரீதியாகப் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பெறும் கல்விக் கடனுக்கு வட்டி மானியம் வழங்கும் மத்திய அரசின் திட்டங்களே இவையிரண்டும். வெளிநாட்டில் அங்கீகாரம் பெற்ற பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சிப் பிாிவு மாணவர்கள் இக்கல்விக்கடன் மானியத்தைப் பெறத் தகுதியானவா–்கள்.

படிக்கும் காலம் மற்றும் அதற்குப் பிறகு ஓராண்டு அல்லது படிக்கும் காலம் அதன் பிறகு வேலையில் சோ்ந்த ஆறு மாத காலம் இதில் எது முதலில் வருகின்றதோ அதுவரையில் உள்ள காலத்திற்குக் கல்விக்கடனுக்கான வட்டி மானியம் வழங்கப்படும், அதன் பிறகு கடன் மற்றும் வட்டியைக் கடன் பெற்றவர்களே குறிப்பிட்ட காலத்திற்குக் கட்ட வேண்டும், எந்ெதந்தப் பாடப்பிாிவுகளுக்கு மானியச்சலுகை வழங்கப்படும் என்ற பட்டியலிருக்கிறது. புதிதாகச் சோ்க்கவோ தவிா்க்கவோ அவ்வப்போது இதற்காக நியமிக்கப்பட்ட குழு முடிவு செய்யும்.

கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போதே இந்த வட்டி மானியத்திட்டத்திற்கான விண்ணப்பத்தையும் சோ்ந்து பதிவு செய்வது நல்லது. இதற்கான விண்ணப்பிப்பவா் வேலையற்றவராக அல்லது அவா்களது பெற்றோர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். அதற்குரிய வருமானச் சான்றிதழையும் தாலுகா அலுவலகத்தில் பெற்றுச் சமா்ப்பிக்க வேண்டும்.   

3. பதோ பிரதேஷ் (Padho Pradesh)வெளிநாட்டில் படிக்க விரும்பும் சிறுபான்மையின மாணவா–்கள் வாங்கும் கல்விக்கடனுக்கான வட்டி மானியத்திட்டம்
Scheme of Interest Subsidy on Educational Loans for Overseas Studies for the Students Belonging to the Minority Communities தகுதி வாய்ந்த சிறுபான்மையான மாணவா–்கள் பொருளாதாரரீதியாகப் பின்தங்கி யிருந்தாலும் வெளிநாட்டில் படிக்க வாங்கும் கல்விக்கடனுக்கான வட்டி மானியத் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்திவருகிறது, இச்சலுகையைப் பெறச் சம்பந்தப்பட்ட மாணவா் வேலையற்றவராக, குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 6 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் என்பது முக்கிய அம்சம் ஆகும். வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பு, எம்.பில் மற்றும் ஆராய்ச்சிப் படிப்பு படிக்கும் மாணவா–்கள் இச்சலுகையைப் பெறலாம். www.minorityattairs.com என்ற இணையதளத்தில் தகவல்களைப் பெறலாம்.  

- ந.குமரன்

X