கல்லூரி மாணவர்களுக்கு மத்திய அரசின் உதவித்தொகை!

9/19/2017 1:24:39 PM

கல்லூரி மாணவர்களுக்கு மத்திய அரசின் உதவித்தொகை!

குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

மத்திய மனிதவள அமைச்சகத்தால் வழங்கப்படும், ‘சென்ட்ரல் செக்டார் ஸ்கீம் ஆஃப் ஸ்காலர்ஷிப்’ (சி.எஸ்.எஸ்.எஸ்.,) உதவித்தொகைக்கு மாணவ, மாணவியரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதிகள்:

2017ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற +2 தேர்வில் 80% மதிப்பெண்களுக்கு மேல் பெற்று, 2017-18 கல்வியாண்டில், உயர்கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

உதவித்தொகை:

இளநிலைப் பட்டப்படிப்புக்கு மாதம் ரூ.1000, முதுநிலைப் பட்டப்படிப்புக்கு மாதம் ரூ.2000.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.10.2017

மேலும் விவரங்களுக்கு: http://mhrd.gov.in/scholarships

X