உதவித்தொகையுடன் எம்.எஸ்., மற்றும் பிஎச்.டி. படிக்கலாம்!

6/11/2019 3:02:21 PM

உதவித்தொகையுடன் எம்.எஸ்., மற்றும் பிஎச்.டி. படிக்கலாம்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

சென்னையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் எம்.எஸ்., மற்றும் பிஎச்.டி., எம்.எஸ்.,+பிஎச்.டி., (ஒருங்கிணைந்த படிப்பு) படிப்புகள் கற்பிக்கப் படுகின்றன. இப்படிப்புகளில் சேர வருடம் முழுவதும் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதிகள்: எம்.எஸ்., மற்றும் எம்.எஸ்.,+பிஎச்.டி., படிப்புகளில் சேர  பி.இ.,/பி.டெக்.,,/பி.எஸ்., ஆகிய ஏதேனும் ஒரு நான்கு ஆண்டு இளநிலை பட்டப்படிப்புப் படித்திருக்க வேண்டும். நேரடி பிஎச்.டி.-யில் சேர்க்கை பெற, எம்.எஸ்., படித்திருக்க வேண்டும். இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

உதவித்தொகை: பிஎச்.டி., படிப்பவர்களுக்கு மாதம் 35,000 ரூபாய் வரையிலும், எம்.எஸ். படிப்பவர்களுக்கு மாதம் 12,000 ரூபாயும் குறிப்பிட்ட படிப்புக்காலம் வரை
உதவித்தொகை வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: சென்னை, ஐ.ஐ.டி.எம். கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்கள் அறிய www.iitm.ac.in  என்ற இணையதளப் பக்கத்தைப் பார்க்கவும்.

X