மத்திய அரசின் உயர்கல்வி உதவித்தொகை!

9/9/2019 3:19:50 PM

மத்திய அரசின் உயர்கல்வி உதவித்தொகை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி படிப்பில் காலெடுத்து வைக்கும் மாணவர்களில் பலர் பொருளாதார சிக்கலால் உயர்கல்வியை விட்டுவிட்டு வேலைக்கு செல்லும் நிலை உள்ளது. இந்நிலையைப் போக்க மத்திய/மாநில அரசுகள் உதவித்தொகைகளை வழங்கி வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் இந்த உயர்கல்விக்கான உதவித்தொகை.

தகுதிகள்: மாநில பாடத்திட்டம் / சி.பி.எஸ்.இ., / ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் மேல்நிலைப் படிப்பில் 80 சதவீத மதிப்பெண்களுக்கும் மேல் பெற்று மருத்துவம், பொறியியல், அறிவியல் போன்ற படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. பெற்றோரது ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும்.

உதவித்தொகை எண்ணிக்கை: இந்த உதவித்தொகை 41 ஆயிரம் மாணவர்கள் மற்றும் 41 ஆயிரம் மாணவிகள் என மொத்தம் 82 ஆயிரம் பேருக்கு வழங்கப்படுகிறது. மேல்நிலை வகுப்பில் அறிவியல், வணிகவியல் மற்றும் கலை பாடப்பிரிவை படித்தவர்களுக்கு முறையே 3:2:1 என்ற விகிதாசாரத்தில் உதவித்தொகை எண்ணிக்கை பிரித்து வழங்கப்படுகிறது. மேலும், ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடும் உண்டு.

உதவித்தொகை விவரம்: இளநிலைப் பட்டப்படிப்பில் முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 10,000 ரூபாய் வழங்கப்படுகிறது. முதுநிலைப் பட்டப்படிப்பில் ஆண்டுக்கு 20,000 ரூபாய் என 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.10.2019 மேலும் விவரங்களுக்கு https://scholarships.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

X