விண்ணைத் தொடும் விமானவியல்

8/4/2017 2:23:53 PM

விண்ணைத் தொடும் விமானவியல்

இன்ஜினியரிங்கில் ஏரோ நாட்டிக்கல் படிக்க பலருக்கும் விருப்பம். பெரும்பா லான பெண்களுக்கு இந்தப் படிப்பின் மீது மோகம் என்றே சொல்லலாம். விமானத்தை பார்த்து மட்டுமே வியந்து கொண்டிருந்த காலம் மாறி விட்டது. அவசர தேவை களுக்கு விமானத்தை பிடித்து செல்லும் நடுத்தர வர்க்கத்தின ரின் வாகனமாக விமானம் மாறி வருகிறது. நேரத்தின் முக்கியத்துவம், பெருகி வரும் போக்குவரத்து நெரிசல் போன்ற காரணங்களால் விமான சர்வீஸ் அதிகரித்து வருகிறது.

விமானத்துக்கான உதிரி பாகம் தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஏரோநாட்டிக்கல் கல்லூரிகளின் எண்ணிக் கையும் அதிகரித்து வருகிறது. பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை வைத்துத் தான் ஏரோநாட்டிக் கல் படிப்பில் சேர முடியும். பயத்தை போக்கி விட்டால் பாடத்திட்டம் மிக எளிமை. விமானம் மற்றும் விமானம் பற்றிய சின்னச் சின்ன விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் இப்போதிரு ந்தே ஆர்வம் காட்டுங்கள். போர் விமானம், பயணிகள் விமானம் மற்றும் ஜெட் விமானம் உள்ளிட்ட பல்வேறுபட்ட விமானங்களை தயாரிக்க கற்றுத்தரப்படுகிறது.

விமானத்தில் குறைந்த சத்தம் ஏற்படுத்தும் இன்ஜின் தயாரிப்பு, ஏரோடைனமிக்ஸ், அகவுஸ்டிக்ஸ், கைடன்ஸ் அண்டு கன்ட்ரோல் உள்ளிட்ட பாடங்களை மாணவர்கள் நான்கு ஆண்டு காலத்தில் கற்றுக் கொள்ளலாம். சென்னை மற்றும் கோவையில் இதற்கான தனி கல்லூரிகள் இயங்குகின்றன.  இப்படிப்பை முடிப்பவர்களுக்கு வேலை வாய்ப்புக்கும் உத்திர வாதம் உண்டு. இஸ்ரோ போன்ற இடங்களிலும் வேலை வாய்ப்புள்ளது. ஏரோநாட்டிகல் படிப்பு எங்கு படிக்கலாம் என்பது தொடர்பான விவரங்களை www.mitindia.edu என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.