மீன்வளப்பொறியியல் கல்வி

8/4/2017 2:31:18 PM

மீன்வளப்பொறியியல் கல்வி

தமிழகத்திலுள்ள மீன்வளக்கல்லூரிகளில், வருகிற 29, 30ல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது. தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை மீன்வள அறிவியல் (பி.எப்.எஸ்சி) பட்டப்படிப்புக்கு ஜூலை 29ம் தேதியும், இளநிலை மீன்வளப்பொறியியல் (பி.இ) பட்டப்படிப்பிற்கு ஜூலை 30ம் தேதியும் பொன்னேரியில் உள்ள மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கலந்தாய்வு நடைபெறும். கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வில் பங்கேற்க மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இளநிலை மீன்வளஅறிவியல் படிப்பில் சேர்வதற்கான கட் ஆப் மதிப்பெண்கள் விவரம்:

பொதுப்பிரிவினர்- 192.75, பிற்படுத்தப்பட்டோர்- 188.50, பிற்படுத்தப்பட்டோர்(முஸ்லிம்)- 177.25, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர்- 188.50, பட்டியலிட்டோர்- 184.25, பட்டியலிட்டோர்(அருந்ததியினர்)- 184.00, பழங்குடியினர்- 180.25, மாற்றுத்திறனாளிகள்- 94.75, முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள்- 184.50, தொழிற்கல்வி பயின்றோர்- 172, விளையாட்டு வீரர்கள்- 160.

இளநிலை மீன்வளப்பொறியியல் பாடத்துக்கான கட் ஆப் மதிப்பெண்கள் வருமாறு:

பொதுப்பிரிவினர்-193, பிற்படுத்தப்பட்டோர்- 190.75, பிற்படுத்தப்பட்டோர்(முஸ்லிம்)- 183.75. மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர்- 190.75, பட்டியலிட்டோர்- 186.50, பட்டியலிட்டோர்(அருந்ததியினர்)-171.25, மாற்றுத்திறனாளிகள்- 175. மொத்தம் 699 மாணவர்கள் இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பிற்கும், 189 மாணவர்கள் இளநிலை மீன்வளப் பொறியியல் பட்டப்படிப்பிற்கும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.

ஒவ்வொரு பிரிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள கட்-ஆப் மதிப்பெண் மற்றும் அதற்குமேல் மதிப்பெண்களைப் பெற்றவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். அழைப்புக் கடிதம் தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது. மேலும் அனைத்து விவரங்களும் வெளியிடப்பட்டுள்ள www.tnfu.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளம் மூலமாக அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.