ரெஸ்யூமின் அவசிய சொற்கள்!

9/11/2017 11:50:15 AM

ரெஸ்யூமின் அவசிய சொற்கள்!

இன்டர்வியூ டிப்ஸ்

இட்லிக்கு சட்னியும், பொங்கலுக்கு நெய்யும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் ரெஸ்யூமில் நாம் எழுதி யிருக்கும் சொற்கள். உங்களது ரெஸ்யூம் குப்பைக்கு போகிறதா, இல்லை ஃபைலில் சேர்க்கப்படு கிறதா என்பதை முடிவு செய்ய நிறுவனத்துக்கு தேவைப்படுவது ஆறு செகண்டுகள் மட்டுமே.

* சூப்பர்மேன் சாதனை
ரெஸ்யூமில் ஆல்வேஸ் தன்னடக்கம் கூடாது. “ரெஸ்யூமில் நீங்கள் செய்த பணிகளை பற்றி துல்லியமாக ப்ராஜெக்டில் உங்கள் வேலை என்ன, எப்படி செய்தீர்கள், கம்பெனிக்கு கிடைத்த பிளஸ் என்ன என்பதைச் சொல்லவேண்டும். அந்தப் பணியில் இவருக்கு துணையாக, உதவியாக என்ற வார்த்தைகளை பயன்படுத்தினால் அவை உங்களது திறமையை மூடுபனியாக மறைத்துவிடும்” என எச்சரிக்கை டிப்ஸ் தருகிறார் கோப்லேண்ட் ஆலோசனை மையத்தின் வல்லுநரான ஏஞ்சலா கோப்லாண்ட்.

* நம்பர்கள் பேசட்டும்!
கம்பெனிக்கு லாபம் என்று பேசியது போதும். இனி நம்பர்களும் கொஞ்சம் பேசட்டும். “டீமில் நீங்கள் பார்ட்னர், லீடர், பணியாளர் என எந்த பொறுப்பு வகித்தாலும் ப்ராஜெக்டின் ரிசல்ட் சொல்லிவிடும் உங்கள் திறமைக்கான ரிசல்ட்டை “ என்கிறார் ஹெச்ஆரான பாய்கின். டீம் லீடர் என்ற வார்த்தையை விட எத்தனை பேருக்கு என்ற எண்களை நிறுவனம் உற்றுக்கவனிக்கும். எனவே குறிப்பிட்ட காலத்தில் ரெஸ்யூமை அப்டேட் செய்து கச்சிதமாக்குவது ஃப்யூச்சருக்கு நல்லது.

* பட்ஜெட்டுக்குள் பட்டாசு!
லாபம் பெற்றுத் தந்தது முக்கியம்தான் ஆனால் அதையும் குறிப்பிட்ட டெட்லைனுக்குள், குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் முடித்திருப்பது சூப்பர் ஸ்பெஷல்தானே! “ப்ராஜெக்டை செலவை குறைத்து வேகமாக செய்து சாதித்தால் அதனை ரெஸ்யூமில் குறிப்பிடுவது உங்களது மதிப்பை ஜிவ்வென உயர்த்தும்” என நச்சென பேசுகிறார் வேலைவாய்ப்பு கவுன்சிலர் அகஸ்டின்.  

* கறாராக காப்பி அடியுங்கள்!
வேலை சம்பந்தமான முக்கிய வார்த்தைகளை அந்நிறுவனத்தின் இணையதளத்தில் ஆழமாக படியுங்கள். அதை படித்தாலே ரெஸ்யூமில் அதனை எப்படி ரீமேக் செய்வது என்று புரியும். நிறுவனத்தினர் வேலைக்கு பயன்படுத்தும் வார்த்தைகளே அவர்களின் தரத்தை சொல்லும் கண்ணாடி.

* சூப்பர் பவர் வார்த்தைகள்!
எந்த வேலை பற்றி ரெஸ்யூமில் பேசும்போதும் Manage, Assist, Handled  என்ற அரதப்பழசான மாவையே அரைக்காதீர்கள். கொஞ்சமே கொஞ்சம் ஷார்ப்பான வார்த்தைகளாக Achived Created என்று எழுதினால் ரெஸ்யூம் ஃப்ரெஷ்ஷாக உங்கள் வேலையை வஜ்ர வலிமையில் உறுதி செய்யும்.

ச.அன்பரசு