கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிக்கலாம்... கை நிறைய சம்பாதிக்கலாம்!

12/19/2017 11:05:18 AM

கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிக்கலாம்... கை நிறைய சம்பாதிக்கலாம்!

நன்றி குங்குமம் சிமிழ் கல்வி வேலை வழிகாட்டி

நறுமணப் பொருட்களின் பயன்பாடு நம் வாழ்வோடு இணைந்த ஒன்றாக உள்ளது. அதிலும் ஆன்மிகத்தில் அதன் பங்கு அதிகமாகவே உள்ளது. நறுமணத்துக்காக மலர்கள் மட்டுமல்ல ஊதுபத்தி, சாம்பிராணி பொடியின் பயன்பாடு குறிப்பிடத்தக்கது. அதிலும் பாரபட்சமின்றி அனைத்து மதத்தினரும் பூஜை செய்ய சாம்பிராணி பயன்படுத்துகின்றனர். இந்த புகை போடும்போது வீடோ அலுவலகமோ எதுவானாலும் நறுமணத்துடன் பூஜைகேற்ற தெய்வ கடாட்சம் பெற்ற இடமாக மாறுகிறது. இதை கட்டாயம் நாம் அனைவருமே உணர்ந்திருப்போம்.

முன்பெல்லாம் பயன்படுத்தியது போல சாம்பிராணி பொடி போட வேண்டுமானால் எரியும் கரிக்கட்டைகள் தேவை. இன்று பெரும்பாலான வீடுகளில் கேஸ் அடுப்புகள் மட்டுமே இருப்பதால் கரிக்கட்டைகள் எளிதில் கிடைப்பதில்லை. நம் பாரம்பரிய முறையான சாம்பிராணி போடும் முறை காலத்துக்கேற்ப மாற்றம் பெற்று கம்ப்யூட்டர் சாம்பிராணி மூலம் நிறைவேற்றப்படுகின்றது. கப் சாம்பிராணி புதியதாக வந்துள்ள சாம்பிராணி. இதில் சாம்பிராணி பொடி உபயோகித்து புகை போடலாம்.

பயபக்தியோடு கடவுளை பூஜை செய்வது எல்லா மதத்தினருக்கும் பொதுவானது. அதிலும் நறுமணப் பொருட்களோடு வழிபடுவது மனதிற்கும், வாழும் சூழலுக்கும் நலம் தரும் நல்ல விஷயம் என்பதை மறுப்பதற்கில்லை. தினமும் தீப தூபங்களோடு கடவுள் வழிபாடு செய்பவர்கள் நம் சமூகத்தில் அதிகமானோர் இருக்கின்றனர். இதற்காக குறைந்த விலையில், நல்ல நறுமணத்துடன் கூடிய கம்ப்யூட்டர் சாம்பிராணியை அனைவரும் கடவுளுக்கு காட்டி வழிபடுகின்றனர்.

இந்த கம்ப்யூட்டர் சாம்பிராணியில் ஒரு உருளையான கரித்தூள் மற்றும் ஒட்டும் பசை நறுமண சென்ட் எளிதில் எரியும் தன்மை கொண்டதாக இருக்கும். இந்த வகை கம்ப்யூட்டர் சாம்பிராணி இப்போது எல்லா இடங்களிலும் வாங்கி பூஜையில் உபயோகப்படுத்துகின்றனர். இதில் சாம்பிராணி நறுமணம் இருக்கும், ஆனால் சாம்பிராணி இருக்காது.

இதில் எரியும் தன்மையுடைய கரித்தூள், மரத்தூள் ஒட்டும் பசை நறுமண தூள் சேர்ந்து ஒரு கப்பாக தயாரிக்கப்படும். இவை அனைத்தும் ஒரு இயந்திரத்தில் இட்டு ஹைட்ராலிக் முறையில் அழுத்தம் கொடுத்து சாம்பிராணி கப்புகளாக தயார் செய்வார்கள். அந்த சாம்பிராணி கப்புகளில் வெற்றிடத்தில் சாம்பிராணியை நிரப்ப வேண்டும்.

அதன் மீது எளிதில் எரியும் துகள்களைப் பரப்ப வேண்டும். இதில் அந்த சாம்பிராணி கப்புகள் எளிதில் தீப்பிடித்து நெருப்புத் துண்டுகளாக மாறும். அத்துடன் உள்ள சாம்பிராணியை புகையாக மாற்றி எளிதில் புகை மண்டலமாக மாற்றிவிடும். அதிக மணம் வேண்டுமென்றால் கடையில் கிடைக்கும் சாம்பிராணியைத் தூளாக்கி அதில் போட்டால் நல்ல நறுமணத்துடன் பூஜை செய்யலாம்.

சிறப்பம்சங்கள்

* கரித்தூள் மற்றும் மரத்தூள் உபயோகிப்பதால் அதிக கரும்புகை இருக்காது.
* எளிதில் பற்ற வைக்கலாம். நறுமணத்துடன் நீண்ட நேரம் எரியும்.
* நகரங்களில் பெரும்பாலும் கம்ப்யூட்டர் கப் சாம்பிராணி பயன்படுத்தப்படுகிறது. பூஜைக்கு உகந்தது.
* இதன் தேவை அதிகம். நல்ல லாபம் தரக்கூடிய தொழில்.
* இந்தத் தொழிலை PMEGP and NEEDS போன்ற திட்டங்களில்அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.

திட்ட அறிக்கை:

முதலீடு (ரூபாயில்)
இடம்                       : வாடகை
கட்டடம்                   : வாடகை  
இயந்திரங்கள் மற்றும்
உபகரணங்கள்         : 4.40 லட்சம்
மின்சாரம் &
நிறுவும் செலவு         : 0.30 லட்சம்
இதர செலவுகள்         : 0.50 லட்சம்
நடைமுறை மூலதனம்     : 3.80 லட்சம்
மொத்த முதலீடு         : 9.00 லட்சம்
இந்தத் தொழிலை அரசின் மானியத்துடன் கடன் பெற்று தொழில் செய்யலாம்.
மொத்த திட்ட மதிப்பீடு : 9.00லட்சம்
நமது பங்கு 5%             : 0.45லட்சம்
அரசு மானியம் 25%     : 2.25லட்சம்
வங்கிக் கடன்               : 6.30லட்சம்

தயாரிப்பு முறை

முதலில் குறிப்பிட்ட அளவு கரித்தூள், மரத்தூள், நிக்கிட், லோபன் பவுடர் மற்றும் கலர் பவுடர் எனப் பல பொருட்களுடன்
நறுமணம் சேர்த்து கலவை இயந்திரத்தில் நன்றாக கலக்க வேண்டும். கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிக்கும் இயந்திரத்தில் உள்ள டையில் நிரப்ப வேண்டும். பிறகு ஹைட்ராலிக் உபயோகித்து அந்த டையில் உள்ள துளைகளில் நிரம்பியுள்ள பவுடர் இறுக்கப்பட்டு கம்ப்யூட்டர் சாம்பிராணியாக மாறும். அவை டையில் இருந்து மறுபடியும் வெளியேற்றப்படும். ஒருமுறை பிரஸ் செய்தால் 60 முதல் 120 சாம்பிராணிகள் வரை கிடைக்கும்.

கப் சாம்பிராணி தயாரிக்க சாம்பிராணி டையை பொருத்தி இயந்திரத்தை உபயோகிக்க வேண்டும். இதில் ஒரே நேரத்தில் 25 கப் சாம்பிராணிகள் தயாரிக்கலாம். 12 சாம்பிராணிகளை ஒரு பாக்கெட்டில் சிறிய கவர்களில் வைத்து பேக்கிங் செய்ய வேண்டும். அவை 144 பாக்கெட்களாக வைத்து பேக் செய்து விற்பனை செய்யலாம்.

தேவையான இயந்திரங்கள்

100 piece of computer
sambrani Hydralic
Machinery               - Rs.2.36 Lakhs
Blender Machine     - Rs.0.42 Lakhs
Cup Making Die
36 Numbers             - Rs.0.60 Lakhs
Dryer                        - Rs.1.50 Lakhs
Total                        - Rs.4.88 Lakhs
Say Rs.4.88 Lakhs

மூலப் பொருட்கள்

* டஸ்ட் பொடி  
* ஜிங்கிட் பவுடர்
* தேவையான வண்ணம்
* லோபான் பவுடர்
* பேக்கிங் பொருட்கள்

மூலப்பொருட்களின் தேவை

* ஒரு மாதம் தேவையான டஸ்ட் பொடி 2500 கிலோ - ரூ.90,000/-
* ஒரு மாதம் தேவையான ஜிங்கட் பவுடர் 250 கிலோ - ரூ. 16750/-
* வண்ணப் பவுடர் ஒரு மாதத்திற்கு 500 கிலோ           - ரூ. 15,000/-
* லோபான் பவுடர் ஒரு மாதத்திற்கு 50 கிலோ            - ரூ. 10,000/-
மொத்தம் - ரூ. 1,31,250/-
நாம் ரூ.1,31,000/-என வைத்துக் கொள்வோம்.

உற்பத்தி மற்றும் விற்பனை வரவு

* ஒரு மாதத்திற்கு 2850 கிலோ மூலப் பொருட்களைக் கொண்டு 4275 டஜன் கம்ப்யூட்டர் சாம்பிராணி பெட்டிகள் தயாரிக்கலாம்.
* ஒரு டஜன் பெட்டியின் விலை ரூ.90/- என வைத்துக்கொள்வோம்.
* ஒரு மாதத்திற்கு 4275X ரூ.90 = ரூ.3,84,750திற்கு விற்பனை செய்யலாம்.

பேக்கிங் செலவு

* 1 கிலோ மூலப்பொருட்களில் இருந்து 1.5 டஜன் பெட்டிகள் கிடைக்கும்.
* ஒரு பெட்டியில் 12 சிறிய காட்டன் பெட்டிகள் இருக்கும்.
* 1 டஜன் பெட்டி கம்ப்யூட்டர் சாம்பிராணிக்கு தேவையானவை

1 x 12 x 12 Boxes - 144 Boxes
* 1 பெட்டி விலை - ரூ.0.90 பைசா
* 1 கிலோ பவுடர் மூலம் 1.5 டஜன் பெட்டிகள்
* 2850 கிலோ பவுடரில் இருந்து 4275 டஜன் பெட்டிகள்
4275 x 144 x 0.90 - Rs.0.56 லட்சம்

* Corrugated box packing Rs.1/Doz   - Rs.0.04 லட்சம்
* பேக்கிங் செலவு மொத்தமாக            - ரூ.0.60 லட்சம்
நடைமுறை மூலதனம்
*மூலப்பொருட்கள் விலை                    -    ரூ. 1.31 லட்சம்
*பேக்கிங் பொருட்கள்                            -    ரூ.0.60 லட்சம்
மொத்தம்                                               -     ரூ.1.91 லட்சம்
ரூ.1.90 லட்சம் என வைத்துக்கொள்வோம்.

வேலையாட்கள் சம்பளம்
சூப்பர்வைசர் 1                 : ரூ.8,000
பணியாளர் 6 x 5000       : ரூ.30,000
தொழில்நுட்பப் பணியாளர் 1: ரூ.6,000
விற்பனையாளர்               : ரூ.6,000
மொத்த சம்பளம்              : ரூ.50,000
மொத்த செலவு
மூலப்பொருட்கள்               : ரூ.1,30,000
பேக்கிங் மெட்டீரியல்         : ரூ. 60,000
மின்சாரம்                          : ரூ. 7,000
சம்பளம்                             : ரூ.50,000
இயந்திரப் பராமரிப்பு         : ரூ.5,000
மேலாண்மைச் செலவு     : ரூ.5,000
வாடகை                            : ரூ.10,000
விற்பனை செலவு               : ரூ.10,000
தேய்மானம் 15%              : ரூ.6,000
கடன் வட்டி                         :  ரூ.07,000
கடன் தவணை
(60 தவணை)                      : ரூ.11,000
மொத்தம்                             : ரூ.3,01,000
லாபம் விவரம்
மொத்த வரவு                       : ரூ.3,84,000
மொத்த செலவு                    : ரூ.3,01,000
லாபம்                                  : ரூ. 83,000

அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு எப்போதுமே அதிக தேவை இருக்கும் என்பதால், சுயதொழில் செய்ய விரும்புவோருக்கு நல்ல லாபத்தை தரும் கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிப்பு. சாம்பிராணி தயாரிப்பு பயிற்சியோடு முயற்சியும் இருந்தால் நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்.

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்

X