பயிற்சி பெற்றால் NEET தேர்வில் நிச்சயம் வெற்றி!

12/20/2017 1:58:39 PM

பயிற்சி பெற்றால் NEET தேர்வில் நிச்சயம் வெற்றி!

நன்றி குங்குமம் சிமிழ் கல்வி வேலை வழிகாட்டி

சென்னை அண்ணாநகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் RGR Academy மருத்துவராக வேண்டும் என்ற மாணவர்களின் கனவை நனவாக்க பல்வேறு வழிகளில் பயிற்சியளித்துவருகிறது. இதன் ஸ்தாபனரும் நிர்வாக இயக்குநருமான கோவிந்தராஜிடம் பேசியபோது அவர் பகிர்ந்துகொண்ட தகவல்களைப் பார்ப்போம்.

“எங்கள் நிறுவனத்தின் மூலம் மாணவர்களை ஊக்கப்படுத்தி அவர்களின் கனவை அடைய உற்சாகத்துடன் ஈடுபடச் செய்ய வைப்பதில் நாங்கள் முழுக் கவனம் செலுத்தி வருகிறோம். மாணவர்களின் தேவையறிந்து அவர்களின் மனவலிமையை அவர்களின் எண்ணங்களின் மூலம் மெருகேற்றி எதையும் அடைய முடியும் என்ற கொள்கையில் மிகவும் நம்பிக்கையுடன் செயல்பட்டுவருகிறோம்.

இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு நடைபெற்ற NEET மருத்துவ நுழைவுத் தேர்வில் தமிழ்நாட்டிலேயே அதிக மாணவர்களைத் தகுதியடையச் செய்ததே இதற்குச் சான்றாகும். பல மாணவர்கள் நாங்கள் வழங்கிய எளிய பயிற்சியின் மூலம் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று அரசுக் கல்லூரிகளில் சேர்ந்து பயனடைந்துள்ளனர்” என்று பெருமிதத்தோடு தெரிவிக்கிறார் கோவிந்தராஜ்.

மேலும் அவர் கூறும்போது, “இந்த வருடம் மாணவர்களின் பொருளாதார நிலையைக் கருத்தில்கொண்டு NEET crush course-ஐ மிகக்குறைந்த கட்டணமாக ரூ.5000-க்கு வழங்க இந்நிறுவனம் முன்வந்துள்ளது. இந்த அரிய வாய்ப்பைப் மாணவர்கள் பயன்படுத்தி 2018-ம் ஆண்டு நடைபெறவுள்ள NEET தேர்வை எழுதி வெற்றி பெறலாம்.

மேலும், மருத்துவத்தில் சேர வேண்டும் என்று நினைக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தொடும் நிலையில் அரசுக் கல்லூரியில் சேர்க்கைக்கான இடங்கள் 3,373 மட்டுமே இருப்பதால், மருத்துவராக வேண்டும் என்ற கனவு தடைப்படக்கூடும்.

அப்படி நிகழாமல் மாணவர்களின் கனவு நிறைவேற நம்முடைய அண்டை நாடுகளான ரஷ்யா, சீனா, பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ் மற்றும் பிற நாடுகள் சென்று படித்து மருத்துவப் பட்டம் பெற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் RGR Academy-யும் AI trust Medical consultancy-யும் இணைந்து Pre Merit Scholarship Test-ஐ நடத்தி ரஷ்ய நாட்டின் அரசுக் கல்லூரிகளில் இலவசமாக சேர இத்தேர்வை ஜனவரி 2018-ல் நடத்த இருக்கிறது.

இதில் கலந்துகொள்ள விரும்புவோர் 9566333317 என்ற எண்ணிலோ அல்லது rgracedemy@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்புகொள்ளலாம்” என்று கூறுகிறார்.மருத்துவராக வேண்டும் என்பதே வாழ்நாள் லட்சியம் என்ற எண்ணம் கொண்ட மாணவர்கள் NEET தேர்வுக்கான பயிற்சிக்கு தயாராகுங்கள்.

X