தேங்காய் வாரியத்தின் கடன் திட்டமும் மானியமும்

11/19/2018 2:31:48 PM

தேங்காய் வாரியத்தின் கடன் திட்டமும் மானியமும்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

மத்திய மாநில அரசுகள் பல்வேறு தொழில்களுக்கு கடன் உதவிகளை வழங்கி வருகின்றன. சுயமாக தொழில் தொடங்க வேண்டும், ஆனால் பணத்துக்கு என்ன செய்வது என்று கவலைப்படுபவர்களுக்கு இந்த கடன் திட்டங்கள் பெரிதும் உதவியாக இருக்கும் . அந்த வகையில் தேங்காயை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கும் பொருட்களுக்கான கடன் திட்டம் மற்றும் மானியம் குறித்த விவரங்களைப் பார்ப்போம்.

தேங்காய் வாரியம் இது மத்திய அரசு நிறுவனம். தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தேங்காய் உற்பத்தி அதிகம். தேங்காயிலிருந்து தேங்காய் ஓடு, தேங்காய் என இரண்டிலிருந்தும் பல பொருட்கள் உற்பத்தி செய்யலாம். தேங்காய்ப் பால், தேங்காய் எண்ணெய், தேங்காய்ப் பால் பவுடர், வெர்ஜின் தேங்காய் எண்ணெய், தேங்காய் சிப்ஸ்,

தேங்காய்க் கற்கண்டு, கிரீம், தேங்காய் ஓடு பவுடர், கோப்ரா காய வைத்தல் என புதிய மாடர்ன் தொழிற்சாலைகள் பெரிய அளவில் தொடங்க தேங்காய் வாரியம் அந்தத் தொழிற்சாலைக்கு மொத்த திட்ட மதிப்பில் 25% மானியம் அளிக்கிறது. ரூபாய் 50 லட்சம் வரை மானியம் பெறலாம். ரூபாய் 2 கோடி அதற்கு மேலும் திட்ட மதிப்பீடு இருக்கலாம்.

இந்த 25% மானியம் நேரடியாக கடன் வழங்கும் வங்கிகளுக்கு அளிக்கப்படும். இது முழுக்க முழுக்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெறும் திட்டங்களுக்கே பொருந்தும். நிலம், கட்டடம் மற்றும் எந்திரங்களின் மொத்த மதிப்பே திட்ட மதிப்பாகும். இதில் 25% மானியமாக பெறலாம்.
இந்தத் திட்டம் புதிய தொழில்கள் மற்றும் ஏற்கனவே நடைபெறும் தொழில்களின் விரிவாக்கம், மாடர்னைசேஷன் போன்றவற்றிற்கும் கொடுக்கப்படும்.

இந்தத் திட்டம் தனி நபர் நிறுவனங்கள் மற்றும் பதிவு பெற்ற கம்பெனிகளுக்கும் பொருந்தும். மேலும் கோ-ஆப்ரடிவ் சொசைட்டி நிறுவனங்கள் கூட பயன் பெறலாம். இந்தத் திட்டம் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் கடன் சார்ந்த தொழில்களுக்கே கொடுக்கப்படும். இதில் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் வங்கி கடன் 40% மேலும் கோ - ஆப்ரடிவ் சொசைட்டிகளுக்கு 25% கடன் அதற்கு மேலும் இருத்தல் அவசியம்.

இந்தக் கடன் மற்றும் மானியம் பெற தகுதியான தொழில்கள்

* Packed tender nut water,
* Coconut water based vinegar,  
* Desiccated coconut powder,
* Defatted coconut powder,
* Coconut cream,
* Coconut milk powder,
* Packed and Branded coconut oil with Agmark standards,
* Virgin Coconut Oil (VCO),  
* Coconut chips,
* Coconut jaggery,
* Snow ball tender coconut,
* Shell powder, shell charcoal, activated carbon,
* Shell/wood based handicrafts,  
* Coconut wood processing units,
* Copra dryer, integrated processing units etc.., and such other New and Innovative coconut   based products,

இந்தத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கையை வங்கிகளுக்கோ அல்லது நிதி நிறுவனங்களுக்கோ அளிக்க வேண்டும். அவர்களின் ஒப்புதல் பெற்றவுடன் இந்தத் திட்டத்தில் மானியம் வழங்குவதற்கு தேங்காய் வாரியத்துடன் விரிவான திட்ட அறிக்கையுடன் விண்ணப்பிக்க வேண்டும். தேங்காய் வாரியமானது தகுதியான திட்டங்களுக்கு ஒரு குழுவின் மூலம் தேர்வு செய்து மானியம் வழங்கும்.

இந்த மானியம் வங்கிக் கணக்கில் ஒரு நிதியாக வைக்கப்படும் இதற்கு வட்டி கிடையாது. மேலும் இந்தத் தொகைக்கு ஈடான கடனுக்கு வங்கிகள் வட்டி வாங்கமாட்டார்கள். கடன் முடியும் தருவாயில் இந்த நிதி வங்கிக் கணக்கில் நேர் செய்யபடும்.

இந்தத் திட்டத்தில் பயன்பெற The Chairman, Coconut Development Board, Kerabhavan, Kochi 682 011. என்ற முகவரியில் விரிவான திட்ட அறிக்கையுடன் விண்ணபிக்க வேண்டும்.

மேலும் இத்திட்டம் பற்றி அறிந்து கொள்ள Coconut Development Board, Government of India, Ministry of Agriculture & Farmers Welfare, P.B. No.1021, Kera Bhavan, SRV Road (Near SRV High School), Kochi - 682 011, Ernakulam District, Kerala State, India.Director, Regional Office, Coconut Development Board, No.47, F1, Dr.Ramaswami Salai, K.K. Nagar, Chennai - 600 078, Tamil Nadu Phone: (044) 23662684, 23663685 ஆகிய முகவரிகளையும் அணுகலாம்.

சேல்ஸ்  ப்ரமோஷனுக்கு 50% மானியம்

தேங்காய் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சந்தை விரிவாக்கம் அதற்கான ப்ரமோஷன் வேலைகள், பிராண்ட் பப்ளிசிட்டி, சந்தைக்கு உகந்த எலக்ட்ரானிக் மீடியா, வெப்சைட், வேர் ஹவுஸ், விற்பனைக் கண்காட்சி, வேறு பொருட்காட்சிகள், விழாக்கள் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் பொருட்காட்சிகள், பிரிண்ட் செய்யப்பட்ட தகவல்கள் பரிமாற்றம், போஸ்டர்கள், பாம்ப்லேட்டுகள் காட்சி அமைக்க வேறு ஊர் மற்றும் வேறு நாடுகளுக்கு செல்லுதல் ஆகியவற்றிற்கும் 50% மானியம் அளிக்கப்படும்.

இது ரூ.10 லட்சம் வரை தனி நபருக்கும், ரூ.25 லட்சம் வரை கோ-ஆப்ரடிவ் சொசைட்டிகளுக்கும் கிடைக்கும். முழுமையான விவரங்களை http://www.coconutboard.gov.in என்ற இணையதளத்தைப் பார்த்தும் தெரிந்து கொள்ளலாம்.

- திருவரசு

X