பிளஸ் 2 வணிகவியலில் முழு மதிப்பெண் பெறுவது எப்படி

1/23/2019 3:36:59 PM

பிளஸ் 2 வணிகவியலில் முழு மதிப்பெண் பெறுவது எப்படி

இந்த ஆண்டு முதல் பிளஸ் 2 வகுப்பிற்கும் பொதுத் தேர்வு மதிப்பெண் 100க்கு கணக்கிடப்படும் என்ற முறை அமலுக்கு வந்துள்ளது. அதிலும் 10 மதிப்பெண்கள் அகமதிப்பெண் முறையில் வழங்கப்பட்டு 90- மதிப்பெண்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்படுகிறது. எனவே வணிகவியல் பாடத்தில் மிக எளிய முறையில் 100 மதிப்பெண்கள் பெற்றுவிட முடியும். பாடங்களை தெளிவாக , முழுமையாக படித்து குறைவாக எழுதி மதிப்பெண்களை அள்ளலாம். 20 சதவீத வினாக்கள் பாடத்தின் உள்ளிருந்து கேட்கப்படும். எனவே ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு முழுமையாக விடையளித்தால் மட்டுமே 100 மதிப்பெண் பெற முடியும்.

2 மதிப்பெண் வினாக்களில் 21ம் எண் வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும். அதேபோல் 3 மதிப்பெண் வினாக்களில் 31ம் எண் வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.2, 3, 5 வினாக்களுக்கு சுலபமாக விடையளிக்க பாடத்தின் பின்னால் உள்ள வினாக்களை மட்டும் படித்தால் போதுமானது. வணிகவியல் படிக்க விரும்புபவர்கள் தொடக்கத்திலேயே அதற்கான அடித்தளத்தை கற்றுக் கொள்ள வேண்டும். பிளஸ் 2 வணிகவியலில் 8 பாடங்கள் உள்ளன. இதில் பாடங்கள் அளவைப் பொருத்து வினாக்கள் கேட்க வாய்ப்புண்டு. அந்த பாடங்களை முழுமையாக படிக்க வேண்டும்.

நேர மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதால் அதற்குள் விடையளிக்க பழகிக் கொள்ளுங்கள். விடைகளை பத்தி பத்தியாக எழுதாமல் தேவையான கருத்துகளை வரிசைப்படுத்தி ஒன்றன் கீழ் ஒன்றாக இருக்குமாறு எழுதினால் நன்றாக இருக்கும். ஒரு மதிப்பெண் வினாக்கள் 20, 2 மதிப்பெண் வினாக்கள் 10, 3 மதிப்பெண் வினாக்கள் 10, 5 மதிப்பெண் வினாக்கள் 7 கேட்கப்படும். ஒருமதிப்பெண் வினாக்களுக்கு முழு மதிப்பெண்களை பெற செய்ய வேண்டியது என்ன, வினாக்கள் கேட்கப்படும் விதம், மாதிரி வினாத்தாள் எப்படி இருக்கும் போன்ற விபரங்களை அறிய ஜனவரி 1 - 15 தேதிய குங்குமச்சிமிழ் கல்வி வேலை வழிகாட்டி இதழைப் பாருங்கள்.

X