வேலை வாய்ப்பு பெற என்ன படிக்கலாம்?

3/27/2019 5:31:15 PM

வேலை வாய்ப்பு பெற என்ன படிக்கலாம்?

நன்றி குங்குமம் கல்வி-வழிக்காட்டி

வழிகாட்டல்

கேம் டிசைன் படிப்புகளும் வேலைவாய்ப்புகளும்!

வேலைவாய்ப்பு பெற என்ன படிக்கலாம்?  வாழ்க்கை வளமாக வேண்டுமென்றால் நல்ல வருமானம் தரும் வேலையில் சேர வேண்டும். வருவாய் ஈட்ட உதவும் வேலை பெற வேண்டுமென்றால் அதற்குத் தகுந்த படிப்பு வேண்டும். அப்படிப்பட்ட படிப்பு எது என்று மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் தேடிக்கொண்டிருக்கும் காலம் இது. அப்படிப்பட்டவர்களுக்கு வழிகாட்டும் விதமாக வழிகாட்டும் பகுதிதான் இது.

கடந்த இதழில் அனிமேஷன் துறையில் என்னென்ன படிப்புகள் உள்ளன, அப்படிப்புக்கு எங்கெங்கெல்லாம் வேலைவாய்ப்புகள் உள்ளன என்பதை விரிவாக கூறியிருந்தோம். அந்த வகையில், இந்தப் பகுதியில் டிசைன் & மீடியா கல்வித் துறையில் தொலைநோக்கு பார்வைகொண்ட கல்வியாளரும், ICAT, IMAGE & IMAGE MINDS நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனருமான க.குமார் கேம் டிசைன் (கணினி விளையாட்டு வடிவமைப்பு) படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு குறித்து கொடுக்கும் தகவல்களை இனி பார்ப்போம்…

கேம் டிசைனிங் என்பது கேரக்டர்களை உருவாக்கி, சுற்றுப்புறத்தை வரைவது தொடர்பான கேம் ஆர்ட் என்பது மட்டுமல்ல. மாறாக, விளையாட்டிற்கான விதிமுறைகளை உருவாக்குவதும் ஆகும். அனைத்து விளையாட்டிலும் கேரக்டர்கள் மற்றும் கதைகளும் ‘கேம் பிளே’யும் இருக்கின்றன. இவற்றையெல்லாம் செய்வதுதான் கேம் டிசைனரின் பணி. கேம் டிசைனர்கள் என்பவர்கள் குழந்தைத் தனமான எண்ணங்களும், தங்களுக்கான ஒரு சொந்த உலகத்தை உருவாக்கிக் கொள்ளும் விருப்பமும் உள்ளவர்கள் என்று வகைப்படுத்தப்படுகிறார்கள்.

மகாபாரத காலத்திலிருந்த பகடை விளையாட்டு தொடங்கி, பதினாறாம் நூற்றாண்டின் பரமபத விளையாட்டு கடந்து பிற்காலத்திய கோலிக்குண்டு, கிட்டிப்புள், சொட்டாங்கல், சீட்டாட்டம் போன்ற விளையாட்டுகளை நாம் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், இன்றைய டிஜிட்டல் தலைமுறை குழந்தைகளுக்கு இத்தகைய விளையாட்டுகளை நாம் அறிமுகப்படுத்தத் தவறினாலும் நவீன டிஜிட்டல்  யுகம், கணினி, மொபைல் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை நமக்கு எண்ணற்ற அளவில் வாரி வழங்கிக்கொண்டிருக்கிறது. விளையாட்டு என்பதை நாம் வெறும் பொழுதுபோக்காக எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதன் உள்ளே பொதிந்துள்ள சூட்சும ரகசியங்களை நாம் அறிந்துகொள்வது மிகவும் முக்கியம்.

கணினி விளையாட்டு (வீடியோ கேம்) ஒருங்கிணைப்பை மேம்படுத்துகிறது, சிக்கல் தீர்க்கும் திறன்களை வளர்க்கிறது, ஞாபக சக்தியை அதிகரிக்கிறது, கவனம் மற்றும் மன ஒருமுகப்படுத்தலை அதிகரிக்கிறது, சுயமாகக் கற்பதற்கு அடிப்படையாகத் திகழ்கிறது, மூளையின் சிந்திக்கும் திறனை அதிகப்படுத்துகிறது, ஒரே நேரத்தில் பலவித பணிகளைச் செய்யும் திறன்களை வளர்க்கிறது, சமூகத் திறன்களை மேம்படுத்துகிறது. அதே சமயம், எந்த விஷயம் எடுத்துக்கொண்டாலும் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு. ஆனால், நல்லதைத் தேர்வு செய்ய வேண்டியது நம் பொறுப்புதான்.

கேம் டிசைன் படிப்புகள்

இத்தகைய சிறப்புகள் பொதிந்துள்ள வீடியோ கேம் எனும் கணினி விளையாட்டுகளை உருவாக்கும் கேம் டிசைன் படிப்புகள் பற்றி இங்கு விரிவாகப் பார்க்கலாம்.கணினி விளையாட்டுகளின் கதைக்களம் மற்றும் விளையாட்டு விதிமுறைகள் உருவாக்குவதில் தொடங்கி, விளையாட்டிற்குத் தேவைப்படும் கதாபாத்திரங்கள், அவர்களின் குணநலன்கள், உபயோகப்படுத்தும் பொருட்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் வடிவமைப்பு போன்ற அனைத்தையும் உருவாக்குவது கேம் டிசைன் படிப்பாகும். சுருக்கமாக சொல்வதென்றால் ஒரு கணினி விளையாட்டில் பார்ப்பது, உணர்வது மற்றும் அவ்விளையாட்டினை மனதார அனுபவிப்பது வரை அனைத்தையும் பார்த்து பார்த்து வடிவமைப்பதே ஆகும்.

கேம் டிசைன் படிப்பின் எதிர்காலம்

இந்தியாவின் கணினி விளையாட்டுத்துறை வருவாய் வரும் 2022-ஆம் ஆண்டில் 801 மில்லியன் அமெரிக்க டாலர்களைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது ஒவ்வோர் ஆண்டும் 14.3 சதவிகிதம் வளர்ச்சி பெறும் என்றும் மதிப்பிடப்பட்டிருக்கிறது. 2016-ஆம் ஆண்டில் வீடியோ கேம்களை தரவிறக்கம் (டவுன்லோடு) செய்வதில் இந்தியா, உலக அளவில் 5-ஆம் இடத்தைப் பெற்றிருந்தது. இத்தகைய தகவல்கள் மூலம், இந்தியாவில் கணினி விளையாட்டுத்துறையின் பிரகாசமான எதிர்காலம் நம் எல்லோர் கண்முன்னும் துல்லியமாகத் தெரிகிறது.

வேலை வாய்ப்புகள்

இதில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெறும்பட்சத்தில், கேம் டிசைனர், லெவல் டிசைனர், கன்டென்ட் டிசைனர், இன்டர்பேஸ் டிசைனர், கேம் ஆர்டிஸ்ட், லீட் டிசைனர், ரைட்டர் போன்ற பல்வேறு வகையான பணி வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.கணினி விளையாட்டுகள் நமது மனஅழுத்தத்தைத் தகர்த்தெறியும் கருவியாக மட்டுமல்லாமல், கல்வி, மருத்துவ சேவை, பொருட்களின் விற்பனை ஊக்குவிப்பு, சமூக விழிப்புணர்வு, விளையாட்டு, இசை, உளவியல், ராணுவம் போன்ற அனைத்துப் பிரிவுகளிலும் காலூன்றி நிற்கிறது. மேலும், ‘ரெஸிடண்ட்  ஈவில்’, ‘டூம்ப் ரைடர்’, ‘அஸாஸின்ஸ் கிரீட்’ போன்ற பிரபலமான கணினி விளையாட்டுகள் ஹாலிவுட் படங்களாக உருமாற்றம் பெற்றதிலிருந்து நாம் இந்த விளையாட்டு களின் உத்வேகத்தையும் மக்களிடம் பெற்றுள்ள பேராதரவையும் எளிதில் அறிந்து கொள்ளலாம்.

நாம் ஏன் இத்துறைப் படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

*ஒவ்வொரு புராஜெக்டும் தனித்துவமானது
*நவீன தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு
*சவாலான வேலை
*பிரகாசமான வேலை வாய்ப்புச் சந்தை
*எண்ணற்ற தனியார் நிறுவன வாய்ப்புகள், விருதுடன் பிரபலமாகும் வாய்ப்புகள்
*விளையாட்டே வேலை, வேலை செய்வதே விளையாட்டு
*பல்வேறு திறமைகள் கொண்ட தொழில் விற்பன்னர்களுக்கு எண்ணற்ற வேலைவாய்ப்புகள் மேலும் வேடிக்கை நிரம்பிய, உற்சாகமான, விளையாட்டு ஆர்வலர்களுக்கு இத்துறைப் படிப்பு ஒரு வரப்பிரசாதமே!

2004-ஆம் ஆண்டிலேயே, இந்தியாவில் முதன்முறையாக PG Diploma in Game Development எனும் முழுநேரப் படிப்பைப் பட்டதாரி மாணவர்களுக்கு ஐகேட்  டிசைன் அண்டு மீடியா காலேஜ் வழங்கியது. மேலும், இந்தியாவில் முதன்முறையாக கேம் டிசைன் உள்ளிட்ட முழுநேரப் பட்டப்படிப்புகளையும் 2006-ஆம் ஆண்டிலேயே வழங்கியது.

இத்துறையில் 15 வருட அனுபவங்களுடன், சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய 3 முக்கிய நகரங்களில் தனது கல்வி வளாகத்தைக் கொண்டு, இதுவரை 1000-க்கும் அதிகமான கேம் டிசைன் படிக்கும் மாணவர்களுக்குப் பயிற்சியளித்ததுடன், இந்த கல்வியாண்டில் மட்டும் தற்போது
500-க்கும் அதிகமான மாணவர்களுக்குப் பயிற்சியளித்துக் கொண்டிருக்கிறோம்.

வழங்கப்படும் படிப்புகள்


1. B.Sc Game Design (Eligibility: +2)
2. B.Sc Game Design & Development (Eligibility: +2)
3. B.Sc Game Programming (Eligibility: +2)
4. PG Diploma in Game Design (Eligibility: Any Graduation)
5. PG Diploma in Game Development (Eligibility: Any Graduation)
6. M.Sc Game Technology (Eligibility: BE, B.Tech, B.Sc Computer Science, BCA, B.Sc IT etc)
மேலும் விவரம் வேண்டுவோர் www.icat.ac.in இணையதளம் மூலமாகவும், 95001 28555 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். அடுத்த அத்தியாயத்தில் UI Design & Development படிப்பு பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

X