ஏராளமான வங்கிப் பணி வாய்ப்புகள்…

11/7/2019 1:55:21 PM

ஏராளமான வங்கிப் பணி வாய்ப்புகள்…

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

வேலை  வேண்டுமா?

நெல்லை கவிநேசன்

வங்கிகளில் வேலைவாய்ப்பு இப்போது அதிகமாகிக்கொண்டு வருகிறது. பல துறைகளில் பட்டம் பெற்றவர்கள் வங்கிப் பணிகளில் விரும்பிச்  சேருகிறார்கள். முன்பெல்லாம், “வங்கியியல் மற்றும் வணிகவியல் படித்தவர்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கும்” என நம்பினார்கள். ஆனால்,  இப்போது பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பி.பார்ம்., பி.வி.எஸ்சி., பி.எஸ்சி., பி.ஏ., பி.காம்., எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.பி.ஏ.,  எம்.சி.ஏ., எம்.காம்., எம்.இ., எம்.டெக்.,  எம்.பில்., பி.எச்டி., என்னும் பட்டப்படிப்பு அல்லது பட்டமேற்படிப்பு என எந்தப்படிப்பில் வெற்றி பெற்றிருந்தாலும், அவர்களுக்கு வங்கியில் வேலை  காத்திருக்கிறது.

“படித்து முடித்தவுடன் நிச்சயம் வங்கியில் வேலைக்குச் சேர்ந்து விடலாம்” என எண்ணி பட்டப்படிப்பை முடித்த சிலருக்கு, வங்கிகளில் சேர  இயலாதநிலை ஏற்பட்டுவிடுகிறது. இதற்குக் காரணம் என்ன?“வங்கிப் பணியில் சேர வேண்டும்” என்ற ஆசை உள்ளவர்கள் பள்ளிப் படிப்பிலிருந்தே  தங்களது தேர்வுத் தயாரிப்பை தொடங்க வேண்டும். ஓய்வுநேரங்களில் வங்கிகள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் சேகரிக்க வேண்டும்.  வங்கியில் ஏற்படும் மாற்றங்களைப்பற்றி தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். வங்கிகள் நடத்தும் போட்டித்தேர்வுக்கான தயாரிப்பிலும் அதிக  கவனம் செலுத்தி அதற்கான முறையான பயிற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும். அப்போது தான், எதிர்பார்த்த வங்கி வேலையை எளிதாகப் பெற  இயலும். முறையான முயற்சியும், சரியான பயிற்சியும் மேற்கொள்ளாதவர்கள் மட்டுமே எதிர்பார்த்த வெற்றியைப் பெற இயலாமல்  தவிக்கிறார்கள்.இந்தியாவில் செயல்படும் கீழ்க்கண்ட வங்கிகளில் பணியாற்ற விரும்புபவர்கள் கண்டிப்பாக போட்டித்தேர்வு எழுத வேண்டும்.

1.    அலகாபாத் வங்கி (Allahabad Bank)
2.    ஆந்திரா வங்கி (Andhra Bank)
3.    பரோடா வங்கி (Bank of Baroda)
4.    பேங்க் ஆஃப் இந்தியா (Bank of India)    
5.    மகாராஷ்டிரா வங்கி (Bank of Maharashtra)    
6.    கனரா வங்கி (Canara Bank)
7.    சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (Central Bank of India)    
8.    கார்ப்பரேஷன் வங்கி (Corporation Bank)
9.    தேனா வங்கி (Dena Bank)
10.    ஐ.டி.பி.ஐ. வங்கி (IDBI Bank)
11.    இந்தியன் வங்கி (Indian Bank)
12.    இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank)
13.    ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (Oriental Bank of Commerce)
14.    பஞ்சாப் அண்ட் சிந்த் பேங்க் (Punjab and Sind Bank)
15.    பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank)
16.    சிண்டிகேட் வங்கி (Syndicate Bank)
17.    யூகோ வங்கி (UCO Bank)
18.    யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (Union Bank of India)
19.    யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா (United Bank of India)
20.    விஜயா வங்கி (Vijaya Bank)   

இந்த வங்கிகள் அனைத்திலும் பணியாளராகச்  சேருவதற்காக  போட்டித்  தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தப் போட்டித் தேர்வுகளை  “இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்‌ஷன்” (Institute of Banking Personnel Selection) IBPS என்னும் அமைப்பு நடத்துகிறது.
இந்த அமைப்பின் மூலம் நடத்தப்படும் தேர்வுகளின் விவரங்கள்
1.    காமன் ரெக்ரூட்மென்ட் பிராசஸ் (சி.ஆர்.பி.) ஃபார் புரொபஷனரி ஆபீசர்ஸ் / மேனஜ்மென்ட் டிரைனீஸ் (Comman Recruitment Process  [CRP] for Probationary Officers / Management Trainees)
2.    காமன் ரெக்ரூட்மென்ட் பிராசஸ் (சி.ஆர்.பி.) ஃபார் ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்ஸ் (Common Recruitment Process [CRP] for Specialist Officers’)
3.    காமன் ரெக்ரூட்மென்ட் பிராசஸ் (சி.ஆர்.பி.) ஃபார் கிளர்க்ஸ்    (Common Recruitment Process [CRP] for Clerks)
4.    காமன் ரெக்ரூட்மென்ட் பிராசஸ் (சி.ஆர்.பி.) ஃபார் ரீஜினல் ரூரல் பேங்ஸ் (Common Recruitment Process [CRP] for Regional Rural  Banks)
- இந்தத் தேர்வுகளைப் பற்றிய தெளிவான விவரங்களும், சரியான புரிதல்களும் கொண்டவர்கள் மட்டுமே வங்கித் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெற  வாய்ப்புகள் உள்ளது. ஐ.பீ.பி.எஸ்.காமன் ரெக்ரூட்மென்ட் பிராசஸ் (சி.ஆர்.பி.) ஃபார் புரொபஷனரி ஆபீசர்ஸ்/மேனஜ்மென்ட் டிரைனீஸ் (Comman  Recruitment Process [CRP] for Probationary Officers / Management Trainees)“தகுதிகாண் நிலை அலுவலர்” என அழைக்கப்படும் “புரொபேஷனரி  ஆபீசர் மற்றும் மேலாண்மை பயிற்சி” பெற தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இந்தத்தேர்வு ஆண்டுதோறும் ஐ.பீ.பி.எஸ். என்னும் அமைப்பால்  நடத்தப்படுகிறது.

கல்வித்தகுதி

பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப் பட்ட ‘பட்டம்’ (Degree) பெற்றவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம்.

வயது விவரம்

தேர்வு எழுத குறைந்தபட்சவயது 20 ஆகும். அதிகபட்சமாக 30 வயது வரை இந்தத் தேர்வை எழுதலாம். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர் 35  வயதுவரை இந்தத்தேர்வை எழுதலாம். பிற பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் 33 வயது வரை இந்தத்தேர்வை எழுதலாம்.  மாற்றுத்திறனாளிகள் 40 வயதுவரை இந்தத் தேர்வை எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தேர்வுக் கட்டணம்

இந்தத்தேர்வு எழுத தேர்வுக் கட்டணம் ரூபாய் 600/- ஆகும். இருந்த போதும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர்கள் மற்றும்  மாற்றுத்திறனாளிகள் ரூபாய்.100 தேர்வுக் கட்டணமாகச் செலுத்தினால் போதும்.தேர்வுமுறை மற்றும் பாடத்திட்டங்கள் பற்றி அடுத்த இதழில்  பார்க்கலாம்.

(தொடரும்.)

X