10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு Diploma in Ceramic Technology படிப்பு

6/9/2016 9:05:43 AM

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு Diploma in Ceramic Technology படிப்பு

தமிழ்நாடு அரசு தொழில் வணிகத்துறையின் கீழ் விருத்தாசலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அரசினர் பீங்கான் தொழில்நுட்பப் பயிலகம் (Government  Institute of Ceramic Technology) 6 மாத காலத் தொழிற்சாலைப் பயிற்சியுடன் கூடிய மூன்றரை ஆண்டு கால Diploma in Ceramic  Technology படிப்பை வழங்கி வருகிறது. இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற  மாணவர்கள் இப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு ஏதுமில்லை. தமிழக அரசின் இட ஒதுக்கீடு விதிமுறைகளைப் பின்பற்றி மாணவர் சேர்க்கை  நடைபெறும். இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், விருத்தாசலம், பீங்கான் தொழில்நுட்பப் பயிலகத்தில் ரூ.150 செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக்  கொள்ளலாம்.

எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.75. அஞ்சல் வழியில் பெற விரும்பு பவர்கள் விண்ணப்பக் கட்டணத்தோடு ரூ.25 கூடுதலாகச் சேர்த்து,  ‘The Principal, Institute of Ceramic Technology, Virudhachalam’ எனும் பெயரில், விருத்தாசலத்தில் மாற்றத்தக்கதாக ஏதேனும்  ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் டி.டி. எடுத்து, வேண்டுதல் கடிதம் ஒன்றையும் இணைத்து ‘Institute of Ceramic Technology, Aladi  Road, Virudhachalam-606 001, Cuddalore District என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை நிரப்பி  மேற்காணும் அலுவலக முகவரிக்கு 17.6.2016 மாலை 5.45 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பிவைக்க வேண்டும்.    

- தேனி மு.சுப்பிரமணி 

X