அரசு ஐடிஐ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு!

7/3/2017 3:34:59 PM

அரசு ஐடிஐ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) மற்றும் தனியார் ஐடிஐ-க்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களின் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு மாவட்ட அளவில் கடந்த ஜூன் 23 முதல் நடைபெற்றுவருகிறது. இது ஜூலை 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுகிறார்கள். கலந்தாய்வு நாள், நேரம், இடம் ஆகிய விவரங்கள் விண்ணப்பதாரர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

அடுத்து வரும் நாட்களில் நடக்க உள்ள கலந்தாய்வில், கலந்துகொள்ளும் மாணவர்கள், தங்களின் அசல் கல்விச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் எட்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொண்டு வரவேண்டும். கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள விண்ணப்பித்த போது, வங்கியில் செலுத்திய 50 ரூபாய்க்கான ரசீதை, அவசியம் கொண்டு வர வேண்டும். அவ்வாறு கொண்டு வரத் தவறினால், கவுன்சிலிங்கின் போது, விண்ணப்பக் கட்டணமாக மீண்டும் 50 ரூபாய் செலுத்த வேண்டும்.

கவுன்சிலிங்கில் தகுதி பெறும் மாணவர்கள், பயிற்சியில் சேரும் போது, சேர்க்கைக் கட்டணமாக டிபாசிட் தொகை 100 ரூபாய், விளையாட்டுக் கட்டணம் பத்து ரூபாய், பதிவுக் கட்டணம் 25 ரூபாய், சான்றிதழ் சரிபார்ப்புக் கட்டணம் 50 ரூபாய் என, மொத்தம் 185 ரூபாய் செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதியைக் குறிப்பிட்டு கலந்தாய்வு நாள், இடம், நேரம் ஆகிய விவரங்களை அறியலாம்.