அதிக வருமானம் தரும் அழகுக் கலை!

9/25/2017 2:37:19 PM

அதிக வருமானம் தரும் அழகுக் கலை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

உலகில் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவது அந்நாட்டின் தொழில் வளர்ச்சியே ஆகும். தொழில் முனைவோர்கள்தான் அந்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துகின்றனர். புதிய புதிய பொருட்கள் மற்றும் சேவைகளைக் கொண்டுவருகிறார்கள். முறையான தகுதி பெற்ற திறன் படைத்தவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துபவர்களும் தொழில் முனைவோர்கள் தான். எனவே, நீங்கள் தொழில் தொடங்கி தொழில்முனைவோராகவும், தொழில் அதிபராக ஆவதும் உங்கள் பொருளாதாரத்தை மட்டும் உயர்த்தாது, நாட்டின் பொருளாதாரத்தையும் சேர்த்து உயர்த்தும்.

என்ன தொழில் செய்யலாம்..?, எப்படிக் கடன் பெறுவது..? எப்படி அரசு சலுகைகள் மற்றும் மானியம் பெறுவது? என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருப்பவரா நீங்கள்? இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் புள்ளிவிவரங்களும், திட்டங்களும் உங்களுக்கு உதவக்கூடும். மனிதர்களுக்கு இறைவன் கொடுத்த வரம் அழகு. அதிலும் ஆதிகாலம் முதல் பெண்கள் தங்களை அழகாகவும், வசீகரமாகவும் காட்டிக்கொள்ளவும் பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். பெண்களுக்கான பிரத்யேகமான அழகு நிலையங்கள் இப்போது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த அழகு நிலையங்கள் பெண்களின் அழகை மெருகூட்டிக் காட்டுவதால் பெண்கள் தன்னம்பிக்கையுடன் உயர்நிலை அடைவதோடு மனதளவிலும் மகிழ்ச்சி அடைகின்றனர். இன்று அதிக அளவில் பெண்கள் வேலைக்குச் செல்வதால் அவர்கள் தங்களை அழகாக வைத்துக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

Ø கலை ஆர்வம் கொண்ட பெண்கள் எளிதில் அழகுக் கலைப் பயிற்சி பெற்று சுயதொழில் தொடங்கலாம். பியூட்டி பார்லர் பயிற்சி மையங்கள் பல இடங்களில் உள்ளன. மத்திய மாநில அரசுகளின் பயிற்சி மையங்களும் உள்ளன.

Ø திருமணம், மஞ்சள்நீராட்டு விழா, கல்லூரி நிகழ்ச்சிகள் என சுபநிகழ்ச்சிகள் தொடங்கி ஆண்டு விழா வரை அழகுக் கலைப் பயிற்சி முடித்தவர்களுக்கு வாய்ப்பு கள் உள்ளன. முகம், கை, கால் மற்றும் தேகம் என அழகைப் பராமரிக்க இந்த அழகுக் கலைப் பயிற்சி உதவுகிறது.

நல்ல லாபம் தரக்கூடிய தொழில். இதன் தேவை அதிகம். இந்தத் தொழிலை அரசு மானியத்துடன் (UYEGP 3 லட்சம், PMEGP 5 லட்சம்) கடன் பெற்றுத் தொழில் தொடங்கலாம்.

த்ரெட்டிங், வாக்சிங், பிளீச்சிங்(Bleaching), ஃபேசியல்(Facial), முடி மற்றும் சிகை அலங்காரம்(Hair and hairstyle), மெகந்தி(Mehandi), கலரிங்(Colouring), மெனிக்யூர்(Manicure), பெடிக்யூர்(Pedicure) மற்றும் மணப்பெண் அலங்காரம்(Bridal Make-up) பள்ளி நாடக நாட்டிய அலங்காரம் முதலியவை சேவைக்கலை ஆகும்.  இந்தத் துறைக்கு வருகிறவர்கள், அரசு சான்றிதழ் பெற்ற அகாடெமியில் சேர்ந்து, கோர்ஸை நன்கு படித்துவிட்டு ஆரம்பிப்பதுதான் நல்லது. அப்போதுதான் உத்தரவாதத்துடன் இந்தத் துறையில் அப்கிரேட் ஆகமுடியும். இதில் ஆர்வமும் அர்ப்பணிப்பும் இருந்தால் நீங்களும் அழகுக்கலை நிபுணராக வலம் வரலாம்.

செயல்முறை
அழகுக் கலையில் பெண்களின் தலைமுடி முதல் பாதம் வரை அனைத்தையும் அழகு மற்றும் பராமரிப்பு செய்வதாகும். முதலில் பெண்களின் முடி. இதில் முடியை வெட்டுதல், கருமை மற்றும் பிற நிறம் சேர்த்தல், பொடுகை நீக்குதல், தேவையற்ற முடிகளை நீக்குதல் முதலியவை அடங்கும். மிக முக்கியமானது சிகை அலங்காரம். சிகை பராமரிப்பு ஜடை பின்னுவது அலங்காரம் ஆகியவை அடங்கும்.

அதேபோல் ஃபேசியலில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. இதில் முகப் பருக்களை அகற்றுதல், தேவையற்ற ரோமங்களை நீக்குதல், புருவத்தைச் சீர்செய்தல், உதட்டுச் சாயம், சருமத்தைப் பளபளப்பாக்குதல், நிறம் மாற்றுதல் போன்றவையாகும். இதில் த்ரெட்டிங், வாக்சிங், பிளீச்சிங் எனப் பலவகை சேவைகள் அடங்கும். பெனிக்யூர், பெடிக்யூர் முதலியன கை, கால், உடல் மற்றும் நகம் போன்றவற்றைச் சீரமைக்கத் தேவையான சேவையாகும்.

திருமண மணப்பெண் அலங்காரம் மிக முக்கியமான ஒன்றாகும். நடைமுறை வாழ்க்கையில் மணப்பெண் அலங்காரம் என்பது பல ஆயிரம் ரூபாய் செலவில் சிறப்பாகச் செய்யபடுகின்றது. எனவே, இப்படிப்பட்ட அழகுக் கலையை நன்கு பயிற்சி பெற்று செய்வது மிக முக்கியம். சிறப்பான முறையில் சேவை செய்தால் நாளுக்கு நாள் வாடிக்கையாளர் அதிகரித்துக்கொண்டே இருக்கும். நல்ல லாபகரமான தொழில்.

திட்ட அறிக்கை:

முதலீடு:

இடம்      : வாடகை
கட்டடம்     : வாடகை  
இயந்திரங்கள்
மற்றும் உபகரணங்கள்    : 2.40  லட்சம்
இன்டீரியர் டெகரேஷன்    : 1.60 லட்சம்
மின்சாரம்&நிறுவும் செலவு     : 0.20 லட்சம்
இதர செலவுகள்    : 0.30 லட்சம்
நடைமுறை மூலதனம்     : 0.50   லட்சம்
மொத்த முதலீடு     : 5.00 லட்சம்

இந்தத் தொழிலை அரசின் மானியத்துடன் கடன் பெற்று சுயமாக செய்யலாம்.

மொத்த திட்ட மதிப்பீடு    : 5.00 லட்சம்
நமது பங்கு 5%    : 0.25 லட்சம்
அரசு மானியம் 25%    :  1.25 லட்சம்
வங்கிக் கடன்    : 3.50 லட்சம்

(UYEGP 3 லட்சம், PMEGP 10 லட்சம் வரை கடன் )

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
PMEGP என்பது பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம். இத்திட்டத்தில் உங்கள் திட்ட மதிப்பீட்டில் நீங்கள் 5% வரை கொண்டு வந்தால் போதும். அரசு நகர்ப்புறங்களில் தொழில் ஆரம்பிக்க 25% மானியமும் கிராமப்புறங்களில் தொழில் ஆரம்பித்தால் 35% மானியமும் வழங்கும் மீதம் வங்கியில் கடனாகப் பெறலாம். வங்கி 12% வட்டியில் 5 வருடக் கடனாகக் கொடுக்கும். இவை அனைத்தும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உள்ள குழுத் தேர்வு செய்து, தகுதி அடிப்படையில் கடன் வழங்கப்
படும்.  ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்குத் திட்ட அறிக்கை தேவை.    

தேவையான இயந்திரங்கள்(கருவிகள்):

S.no    Particulars    Nos    Rate (Rs.)    Price (Rs.)           
1    Beauty Chair    3    10,500    31,500   
2    Shampoo Unite Chair    2    18,500    37,500   
3    Facial Bed    2    5,900    11,800   
4    Facial Steamer    2    3,800    7,600     
5    Head Steamer    2    4,250    8,500     
6    Cutting Stool    3    3,200    9,600     
7    Galvanic    2    2,800    5,600     
8    High freequency    1    2,800    2,800     
9    Ultrasonic Machine    1    2,850    2,850     
10    Starlizer    1    4,200    4,200     
11    Hair Straightener    2    1,800         3,600     
12    Carling Tong Machine    2    1,850    3,700     
13    Towel Warmer    2    7,500    15,000   
14    Ultrasonic & Warts Remover  2 in 1    2    3,200    6,400     
15    Hai Cllipar    3    1,800    5,400     
16    Hair Trimmer    3    1,850         5,550     
17    Infra Red Lamp    2     4,000    8,000     
18    Warts Remover     2    3,250    6,500     
19    Hair Dryer    3    1,800    5,400     
20    Facial Trolly    2    3,500    7,000     
21    Equipment Trolley    3    2,600    7,800     
22    Facial Messager    2    1,900    3,800     
23    Wax Heater    2    350    700         
24    Oil Heater    2    375    750         
25    Vapoizer    2    190    380         
26    Perafine Wax Heater    1    2,500    2,500     
27    Skin Taster    1    2,000    2,000     
28    2In1 Vaccum & Spray    3    4,200    12,600   
29       Skin Analizer    2    5,500    11,000   
Total    2,35,630
              
மூலப்பொருட்கள்:
இங்கு சோப்பு, ஷாம்பு, பவுடர், கிரீம்ஸ் மற்றும் இதர பொருட்கள் என மாதத்திற்குச் சுமார் ரூ.15,000 வரை தேவைப்படும்.

சேவை  மூலமான வருமானம் ஒரு மாதம்

Description    Nos.    Rate
(Rs.)    Total value (Rs.)
Eye Brow    200     30.00     6,000
Manicure     50     300.00     15,000
Pedicure     20     200.00     4,200
Head Massage     30     200.00     6,000
Hair bleaching     60     200.00     12,000
2Arm bleaching     60     150.00     9,000
Face bleaching     60     500.00     30,000
Stomach bleaching     30     600.00     18,000
Waxing     60     150.00     9,000
Facial     30     800.00     24,000
Hair style     100     200.00     20,000
Hair cutting     100     300.00     30,000
Synthetic dye     40     400.00     16,000
Bridal make up     10    -3000.00     30,000
Puffing of hair     10     600.00     6,000
Make-up     10    -2000.00     20,000
Meganthi     10     500.00     10,000

Total    2,65,200

ஒரு மாதத்திற்கு 25 நாட்கள் வேலை எனில் : ரூ.2,65,200   
மாத மொத்த வருமானம் ரூ.2,65,000/-

வேலையாட்கள் சம்பளம்:
மேலாளர் 1    : ரூ.12,000   
ரிசப்ஷன் 1     : ரூ. 8,000   
பணியாளர் 6    : ரூ.60,000   
மொத்த சம்பளம்     : ரூ.80,000  

மொத்த செலவு:
மூலப்பொருள்கள்    : ரூ.15,000   
மின்சாரம்    : ரூ.10,000   
சம்பளம்    : ரூ.80,000   
வாடகை    : ரூ.20,000   
கருவிகள் பராமரிப்பு    : ரூ.10,000  
மேலாண்மை செலவு    : ரூ. 5,000   
தேய்மானம் 15%    : ரூ. 4,000
கடன் வட்டி    : ரூ. 4,000   
கடன் தவணை
(60 தவணை)    : ரூ. 6,000   
மொத்தம்    : ரூ.1,54,000   

லாபம் விவரம்:
மொத்த வரவு    : ரூ.2,65,000   
மொத்த செலவு    : ரூ.1,54,000   
லாபம்    : ரூ. 111,000
நிகர வருவாய்           : ரூ. 1 லட்சம்

ஆகவே, பெண்கள் சுயமாகத் தொழில் தொடங்க நினைத்தால் பியூட்டி பார்லர்களைத் தொடங்கலாம். முறையாகத் திட்டமிட்டுச் செயல்பட்டால் நல்ல வருவாய் பெறலாம்.

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்

X