செயற்கைக்கோள் தயாரிக்க மாணவர்களுக்குப் பயிற்சி!

2/4/2019 3:19:10 PM

செயற்கைக்கோள் தயாரிக்க மாணவர்களுக்குப் பயிற்சி!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

2019ம் ஆண்டிற்கான இஸ்ரோவின் திட்டங்கள் குறித்து புதுடெல்லியில் இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கம் அளித்தபோது, ‘ஆள் இல்லா விண்கலம் அனுப்பும் முதல் திட்டம் 2020ம் ஆண்டிலும், 2வது திட்டம் 2021 ஜூலையிலும், மனிதர்களுடனான விண்வெளி பயணத் திட்டம் 2021 டிசம்பரிலும் செயல்படுத்தப்படும்.

மேலும் இளம் விஞ்ஞானிகளைக் கண்டறிந்து உற்சாகப்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அனைத்து மாநில மாணவர்களைக்கொண்டு இளம் விஞ்ஞானிகள் திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு மாதம் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் 3 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்படும்.

மாநிலங்களின் ஒத்துழைப்போடு, இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். திரிபுராவில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி, நாக்பூர், ரூர்க்கேலா, இந்தூர் ஆகிய இடங்களில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது.சிறிய செயற்கைகோள் தயாரிக்க மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதுடன், அவர்களின் செயற்கைகோள்கள் பி.எஸ்.எல்.வி. மூலம் செலுத்தப்படும். செயற்கைகோள், விண்வெளி துறையிலும் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்படும். இதற்காக இஸ்ரோவில் குழு அமைக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

X