டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சியும் பயனும்..!

5/7/2019 4:33:24 PM

டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சியும் பயனும்..!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

அபார வளர்ச்சியடைந்துவிட்ட தொழில்நுட்ப உலகில் இருந்த இடத்திலிருந்தே ஏராளமான காரியங்களை சாதிக்கும் நிலை உருவாகிவிட்டது. அதிலும் குறிப்பாக இணைய சேவை மனித வாழ்க்கையின் அங்கமாகவே ஆகிவிட்டது. இன்றைக்கு எல்லா துறைகளுமே இணையத்தின் மூலம் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பதும் இன்றியமையாததாகிவிட்டது. அதனால் டிஜிட்டல் மார்க்ெகட்டிங் பயிற்சி பெறுவதன் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதோடு, சுயமாக தொழில் செய்து நல்லதொரு வருமானமும் ஈட்டமுடியும் என்கிறார் ஸ்டார்ட்டப் எக்ஸ்பெர்ட்ஸ் தலைமைச் செயல் அதிகாரி ஷ்யாம் சேகர். எப்படி என்பதை இனி பார்ப்போம்…

ஒரு பொருளை சந்தைப்படுத்துவதற்கு பல விளம்பர யுக்திகள் கையாளப்பட்டு வருகின்றன. விளம்பரம் அனைத்து மக்களிடமும் சென்றடைவதற்கு செய்தித்தாள்கள், வானொலி, தொலைக்காட்சி, சமூக வலைத்தளம் போன்ற பல ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 8 - 10 வருடங்களில் பாரம்பரிய ஊடகங்களைவிட ஆன்லைன் ஊடகங்கள் வியக்கத்தக்க வகையில் மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளன. எதனால் இந்த ஆன்லைன் ஊடகங்களின் வளர்ச்சி?

 Google, Facebook, Instagram, Linkedin போன்ற ஆன்லைன் பிளாட்ஃபார்ம்கள் பொருட்களையோ / சேவைகளையோ(product/service) இருந்த இடத்திலிருந்தே உலகின் எந்தவொரு இடத்திற்கும் எளிதாக கொண்டு சேர்க்கும் வகையில் வழிவகை செய்துள்ளது. ஆன்லைன் ஊடகங்களின் மூலம் நடக்கும் வியாபாரமானது எல்லையற்றது.

 இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகம்கடந்த 5 வருடங்களில் ஆன்லைன் வர்த்தகங்களின் மூலம் முதலீடு செய்யும் தொகையானது 0.94 - 1.15 Billion USD (பில்லியன் டாலர்களில்) உயர்ந்துள்ளது. இதனால் ஆன்லைன் வர்த்தகம் (Digital Marketing) மூலம் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. மேலும், இதைக் கற்றுக்கொள்வதற்கு 20,000 முதல் 40,000-க்கும் அதிகமான ரூபாய் செலவிடப்படுகிறது. இத்துறையில் திறன் மிக்க நபர்களை உருவாக்குவதற்கு ஸ்டார்ட்டப் எக்ஸ்பெர்ட்ஸ் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை கிரீன் சிட்டியும் இணைந்து Leap Rotary Digital Marketer Program-ஐ வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதில் மூன்று மாத காலத்திற்கு முற்றிலும் இலவசமாக பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்த ப்ரோக்ராமின்படி கீழ்க்கண்ட தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகின்றது.

1. Search Engine Optimization
2. Search Engine Marketing, Google Adwords
3. Social Media Marketing
4. E-mail Marketing போன்ற செய்முறை பயிற்சிகள் மூன்று மாதத்திற்கு வழங்கப்படுகிறது.

ட்ரெண்டிங் தொழில் (Trending Profession)ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கும் வேலை வாய்ப்புகள் அதிவேகமாக வளர்ந்துகொண்டே வருகின்றன. அதில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மிகச்சிறந்த ஒன்றாக கருதப் படுகிறது. ஏனென்றால் டிஜிட்டல் மார்க்கெட்டிங் எண்ணற்ற துறைகளில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துவிட்டது. பொதுவாக வேலைவாய்ப்பானது ஆண்/பெண் என இருபாலருக்கும் இருந்தாலும் இத்துறை பெண்களுக்கு மிகவும் பொருத்தமானதாக கருதப்படுகிறது.

எதனால் டிஜிட்டல் மார்க்கெட்டிங்  பெண்களுக்கு பொருத்தமானது?

மாற்றிக்கொள்ளக்கூடிய பணி நேரங்கள் (Flexible Timings). மற்ற பணிகளைப் போன்று வரையறுக்கப்பட்ட நேரங்களில் வேலை செய்யும் கட்டாயம் இல்லை. விருப்பத்திற்குரிய நேரங்களில் பணி செய்யலாம். இதற்கு IT துறையைப் போலProgramming அறிவுத்திறன் தேவை இல்லை. அடிப்படை computer அறிவு இருந்தாலே போதுமானது.

வீட்டில் இருந்துகொண்டே பகுதிநேர பணியாளர்களாகவோ(Part Time Jobs) அல்லது குடும்பத் தொழிலுக்கோ(Family Business) அல்லது வேறு நிறுவனத்திற்கோ டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்து கொடுக்க முடியும். இந்தத் தொழிலில் பணிபுரிவதற்கு ஒரு குறிப்பிட்ட பட்டப்படிப்பு (Degree) இருக்க வேண்டும் என்ற வரைமுறை இல்லை.

இணையத்தின் இன்றைய பயன்பாடுகள்

இணையதளத்தின் பயன்பாடுகள் என்பது இன்றைக்கு எத்தனையோ வகையாக உள்ளன. தேடுபொறிகள் (Search Engines), மின்னஞ்சல் (e-mail), இணைய
தளங்கள் (websites), வலைப்பூக்கள் (Blogs), சமூக இணையதளங்கள் (Socical Networks (Twitter, Facebook, LinkedIn), காணொளிக் காட்சிகள் (Video Sharing Services (You-Tube), மின்னாளுமை (e-Governance), மின்வணிகம் (e-Commerce), இணைய ஊடகங்கள் (Web Versions of Electronic Media), மின் தரவுத்தளங்கள் (Online Encyclopedia (Wikipedia), மின்கலைக்கூடங்கள்  (Electronic Art Galleries), இணையக் கல்விக்கூடங்கள் (Web Based Learning, e-learning) என பல்வேறு நிலைகளில் நம் வாழ்வில் கலந்துவிட்டன.

நமக்குத் தேவையான செய்திகளை எழுத்து (Text), படங்கள் (Image), ஒலிக்கோப்புகள் (Audio), காணொளிகள் (Video) போன்ற பல்வேறு வடிவங்களில் பெறுகின்றோம். மின்னஞ்சல் அனுப்புதல், கோப்புகளைப் பகிர்ந்துகொள்ளுதல், பஸ், ரயில், விமானம், திரைப்படம் என எல்லாவற்றிற்கும் முன்பதிவு செய்தல், நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வு போன்றவற்றுக்கு விண்ணப்பித்தல் மற்றும் முடிவுகளைப் பெறுதல், நேரில் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசுவதுபோல் இணையவழிக் கலந்துரையாடல் செய்தல், இணையவழியில் பாடம் கற்றுக்கொள்ளுதல், இதழ்களைப் படித்தல், இணையவழி தொலைக்காட்சி பார்த்தல், வணிகம் செய்தல் என இணையத்தின் பயன்பாடு இவ்வளவுதான் என்று வரையறை செய்ய முடியாத அளவுக்கு அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக இணையதளம் ஆகிவிட்டது.

யார் தகுதியானவர்கள்?

2017-2018, 2018-2019 ஆம் கல்வி ஆண்டில் பட்டப்படிப்பை முடித்த மாணவர்கள் இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். info@startupxperts.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களைப் பற்றிய தகவல்கள் அடங்கிய Bio-Data-வை பகிரலாம். மேலும் விவரங்களுக்கு சென்னை சாலிகிராமத்தில் உள்ள Startup Xperts Business Consulting என்ற பயிற்சி அளிக்கும் நிறுவனத்திற்கு 8056222884 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

X