காலணி வடிவமைப்பு பட்டயப்படிப்பில் சேர அரிய வாய்ப்பு!

2/10/2020 4:57:18 PM

காலணி வடிவமைப்பு பட்டயப்படிப்பில் சேர அரிய வாய்ப்பு!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

+2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

மத்திய காலணி பயிற்சி நிறுவனமானது (Central Footwear Training Institute-CFTI) மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் தன்னாட்சி அந்தஸ்துடன் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் 1957ம் ஆண்டு தொடங்கப்பட்டது. லண்டன் கல்விநிறுவனங்கள் உட்பட சர்வதேச கல்விநிறுவனங்களுடன் இணைந்து சர்வதேச தரத்திலான காலணி உற்பத்தி மற்றும் வடிவமைப்பு சார்ந்த படிப்புகளை வழங்கிவருகிறது.

இக்கல்விநிறுவனத்தில் நவீன தொழில்நுட்பங்கள் சார்ந்த பல்வேறு குறுகிய, நீண்ட மற்றும் சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன. சென்னை கிண்டியில் இயங்கிவரும் இக்கல்விநிறுவனத்தில் 2020ம் கல்வி ஆண்டுக்கான பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்

தற்போது 18 மாத கால அளவிலான Post Graduate Higher Diploma in Footwear Technology & Management Studies (PGHD) மற்றும் Post Graduate  Diploma in Footwear Technology (PGDFT), ஒரு வருட கால அளவிலான Post Diploma in Footwear Technology (PDFT), Advanced Certificate Course in Footwear Design & Product Development (FDPT), Advanced Certificate Course in Footwear manufacturing Technology (FMT), ஆறு மாத கால அளவிலான Condensed Course in Footwear Design & Production (CFDP) மற்றும் மூன்று மாத கால அளவிலான Certificate in Shoe Computer Aided Design (CSCAD) ஆகிய படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கிறது.   

கல்வித் தகுதி

பல்வேறு படிப்புகளுக்கு மாணவர்சேர்க்கை நடத்தப்படுவதால் படிப்புகளுக்கு ஏற்ப கல்வித் தகுதி மாறுபடுகிறது. Post Graduate Higher Diploma in Footwear Technology & Management Studies (PGHD) படிப்பிற்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்விநிறுவனங்களில் பொறியியல், அறிவியல் அல்லது நிர்வாகம் என ஏதாவது ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். Post Graduate  Diploma in Footwear Technology (PGDFT) படிப்பிற்கு ஏதாவது ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். Post Diploma in Footwear Technology (PDFT) படிப்பிற்கு ஏதாவது ஒரு துறையில் டிப்ளோமா முடித்திருத்தல் அவசியம். Post Diploma in Footwear Technology (PDFT) படிப்பிற்கு +2 தேர்ச்சியும் மற்ற அனைத்துப் படிப்புகளுக்கும் பத்தாம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருத்தல் வேண்டும்.  

வயது வரம்பு  
 
இதில் Certificate in Shoe Computer Aided Design (CSCAD) படிப்பிற்கு வயது வரம்பு கிடையாது. மற்ற அனைத்துப் படிப்புகளுக்கும் 1.8.2020 அன்றின்படி விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கு வயதுவரம்பில் ஐந்து ஆண்டுகள் தளர்வு அனுசரிக்கப் படுகிறது. மேலும் எஸ்.சி / எஸ்.டி மாணவர்களுக்கு அரசு விதிகளின்படி 22.5 சதவீதம் மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.  
 
தேர்ந்தெடுக்கப்படும் முறை

பத்தாம் வகுப்பு, +2, டிப்ளமோ மற்றும் இளங்கலை என விண்ணப்பதாரர்கள் தாங்கள் படிப்பில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.   

சிறப்பம்சங்கள்

Post Graduate Higher Diploma in Footwear Technology & Management Studies (PGHD) படிப்பானது, லண்டனில் இயங்கிவரும் Leicester College உடன் இணைந்து வழங்கப்படும். மாணவர்களுக்கு ஆறு வாரங்கள் அங்கு பயிற்சி யளிக்கப்பட்டு லண்டன் கல்லூரியால் சான்றிதழ் வழங்கப்படும்.  

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.cftichennai.in என்ற இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். முதலில் வருபவர்களுக்கே மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படும்.  

கூடுதல் தகவல்கள்

படிப்புகள், கல்வித்தகுதி, வயது வரம்பு உட்பட மேலதிக தகவல்களை தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் மேற்காணும் இணையதளம் வழியாகவோ அல்லது cfti@cftichennai.in / admission@cftichennai.in என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகத் தொடர்புகொண்டு பெறலாம், அல்லது 9677943633 / 9677943733 என்ற  தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு அட்மிஷன் தொடர்பான சந்தேகங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

தொகுப்பு: வெங்கட் குருசாமி

X